190. மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோல வட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்ற நீர்
ஞால வட்டம் மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே!!!
மூல வட்டமாகிய கருமுட்டையில் முளைத்த சீவன் தமிழ் எழுத்தின் ஐந்தாவது எழுத்தான உ. இந்த உ என்பது சிவம் எனும் நாதம் கீழே உள்ள கோடாகவும் 0 எனும் வடிவத்தில் சக்தியாகிய விந்துவும் இணைந்த எழுத்துதான். இந்த சீவன் பனிக்குடத்தின் உள்ளே வளர்கிறது. அந்த பனிக் குடத்தின் நீரைத்தான் குலைந்து அலைந்து நின்ற நீர் என்கிறார். அந்த நீர் மூன்று பொருட்களால் ஆனது. வெளி, காற்று ஆகாயம் மூன்றும் சேர்ந்தது தான் நீர். ஞால வட்டம் என்றால் இந்த பூமி (ஞாலம்) ஓ எனும் வட்டத்தில் சுற்றுவதைப் புரிந்து கொள்வதுதான் ஞானம் ஆகிலோ என்கிறார். இந்த ஓம் எனும் ஞால வட்டம் தான் ஞானம்.
அந்த பனிக்குடத்தில் ஏல வட்டம் ஆகியே இருந்தது என்றால் பனிக்குடத்தில் சுருண்டு ஏலக்காய் வடிவில் நீள் வட்டமாக வளர்ந்து கொண்டு இருப்பதுதான் அந்த சிவாயம் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments