189. அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்க வல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே!
அருக்கனோடு சோமனும் என்றால் சூரியகலை சந்திரகலை என்பது இடது, வலது உள் மூச்சு, வெளி மூச்சு, வயிற்றின் உள்ளே சென்று வெளியே வரும் வழியில் மூக்கின் மேலே மூன்று அங்குலத்தின் உள்ளே (அதற்கும் அப்புறத்திலே) நம் சுழிமுனையில் நெருக்கி நம் தாரகை என்றால் நம் விண்மீனைப் போன்ற வெளிச்சம் கொண்ட உயிரின் அருகில் நெருங்கி நின்ற இறைவனை ,
அ உ ம் எனும் முப்பொருளை உருக்கி ஓம் எனும் ஓர் எழுத்தாக , சிற்றம்பலம் எனும் சிரசில் ஒப்பிலாத வெளியில் பார் தங்கி இருக்க முடிகிறதோ அவர்கள் தான் இனி பிறப்பது இல்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments