188. முட்டு கண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று கட்டும் அற்று முடிவில் நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்த வீடதாகுமே !!!
தாய் வயிற்றில் கருமுட்டையை எட்டிய விந்து முளைத்து எழுந்து சீவனாகியது. அந்த சீவனை கட்டிக் கொண்டு நின்ற சிவம் எங்கே என்று கடந்து சென்று நோக்க வல்லீரேல். அவன் முட்டும் அற்று கட்டும் அற்று நம் பால்வெளியின் மையத்திலிருந்து நான்கு கரங்களால் எட்டுத்திக்கும் இருக்கும் அனைத்தையும் , அதாவது கோடிக் கணக்கான சூரியன்களையும், புவனங்களையும் தன்னகத்தே கட்டிக் கொண்டு இந்த தூமையில் முட்டி நின்ற சீவனையும் கட்டிக் கொண்டு நிற்கிறார் என்கிறார் சிவவாக்கியர். அவருடைய வீடு என்பது இந்தப் பால் வெளியின் மையமான சிவம். Orion Constallation – ல் தெரியும் சிவம் தான் நாம் அனைவரும் சென்று சேர வேண்டிய வீடு பேறு அடைதல்.
Tags: சிவவாக்கியம்
No Comments