187. வேடமிட்டு மின் துலக்கி மிக்க தூப தீபமாய்,
ஆடறுத்து கூறு போட்ட அவர்கள் போல பண்ணுகிறீர்.
தேடி வைத்த செம்பலாம் திரள்பட பரப்பியே,
போடுகின்ற புச்ப பூசை பூசை என்ன பூசையோ!
இரண்டு வகையான முகதி உண்டு. ஒன்று உணர்வினால் இறைவனை அடைவது. மற்றொன்று அறிவால் இறைவனை அடைவது. உணர்வினால் இறைவனை அடைய நினைப்பவர்களின் பாதை பக்தி பாதை. அறிவினால் இறைவனை அடைய நினைப்பவர்கள் பாதை சித்தாந்தம், தத்துவங்கள் என அந்த பாதையில் செல்வார்கள். முதலில் பூனை பாதை பின் குரங்கு பாதை. சிவவாக்கியர் அறிவால் (புத்தியால்) இறைவனை புரிந்து கொள்ள முயற்சித்தவர். சித்தர்கள் அனைவரும் அறிவால் இறைவனை அடைய முயற்சித்தவர்கள். ஆனால் இந்த பக்தி பதையும் , தத்துவ பாதையில் இருக்கும் சித்தர்கள் யாரும் மக்களை ஏமாற்ற மாட்டார்கள். இறைவனை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு பாதையை பிடித்து, மற்றவர்களுக்கும் வழி காட்டுவார்கள். ஆனால் வேடமிட்டுத் இந்த ஆன்மீகம் எனும் பெயரில் சம்பாதிக்கவும் , அதிகாரம் செலுத்தவும் நினைக்க மாட்டார்கள். அப்படி வேடமிட்டு விளக்குகளை துலக்கி, மிக்க தூப தீபம் ஏற்றி படாபடோமாக யாருக்கும் புரியாத மொழிகளில் பிதற்றிக் கொண்டு பூசை செய்பவர்களும், ஆடறுத்து கூறு போட்டு பூசை செய்பவர்களைப் போல பண்றுகிறார்கள் என பக்தியில் இறைவனை அடைய . நினைப்பவர்களைப் பார்த்துக் கேட்கிறார். தேடி வைத்த செம்புகளில் நூல்களைக் கட்டி, திரள் பட பரப்பி மலர்களைக் கொண்டு போடுகின்ற பூசையை அவர் ஒத்துக் கொள்ள வில்லை. நம் பக்தி இலக்கியங்களால் பாமாலைகளால் இறைவனுக்கு பூசை செய்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் இறைவனை அடைந்து சீவ சமாதி அடைந்தார்கள் ஆனால் இந்த பூசைகளால் இறைவனை கான முடியாது என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments