186. துருத்தியுண்டு கொல்லருண்டு , சொர்ணமான சோதியுண்டு.
திருத்தமாய் மனசில் உண்ணி திகல ஊத வல்லீரேல் ,
விருத்த தூணில் அங்கியே பிளம்ப தாய் விரித்திடும் ,
திருத்தமான சோதியும் தீயும் அல்ல தில்லையே!
நம் சிற்றம்பலம் எனும் சிரசில் உள்ள உயிர் எனும் நான் , துருத்தி எனும் காற்று ஊதும் கருவியை ( தூங்கும் போது வயிறு ஏறி இறங்குவது இயல்பு அதைத்தான் துருத்தி எனும் கருவி என்கிறார்), நாம் விழித்த நிலையில் அந்த துருத்தியை , நம் முயற்சியால் தான் இயக்க முடியும், தானாக இயங்காது அதைத்தான் கொல்லருண்டு என நம்மைத்தான் கூறுகிறார். நம் சிரசில் இருக்கும் உயிர் எனும் சொர்ணமான சோதியை யார் துருத்தி எனும் கருவி கொண்டு திகல ஊத முடிந்த வல்லவர்களால் நம் திரைகள் இந்த உடலில் இருந்து பிளம்பு போல விரித்திடும் அந்த திருத்தமான சோதி தீயும் அல்லதில்லையே என்கிறார். அந்த சோதி தீயால் (வெப்பம்) ஆனதல்ல என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments