சிவவாக்கியம் பாடல் 184 – ஓதொனாமல் நின்ற நீர்

சிவவாக்கியம் பாடல் 184 – ஓதொனாமல் நின்ற நீர்

184. ஓதொனாமல் நின்ற நீர், உறக்கம் ஊனும் அற்ற நீர்.
சாதி பேதம் அற்ற நீர். சங்கை அன்றி நின்ற நீர்.
கூவிலாத வடிவிலே, குறிப்புணர்த்த நின்ற நீர்.
ஏதுமின்றி நின்ற நீர். இயங்குமாறு தெங்கனே ?

ஐந்து பூதங்களில் முதலில் தோன்றிய பூதம் ஆகாயம் அதில் நிறைந்து நின்றது ஓசை. ஓசை எனும் சூக்குமத்தில் இருந்து தோன்றியது தான் ஆகாயம் எனும் பூதம். ஆகாயம் எனும் பூதத்திலிருந்து அசைந்தது தான் காற்று. அசைவைத்தான் கால் என்கிறோம். ஊறு என்கிற தொடு உணர்ச்சியிலிருந்து தோன்றியது தான் காற்று. ஆகாயம் காற்று இவற்றிலிருந்து தோன்றியது தான் வெப்பம் இது தான் ஒளியாக கண்களாக நமக்கு வெளிச்சமாக இருக்கிறது. இந்த வெப்பம் எனும் பூதத்தில் சத்தம் இருக்கும், அசைவு இருக்கும் ஒளி இருக்கும். மூன்றும் சேர்ந்ததுதான் வெப்பம் எனும் பூதம். இந்த ஆதியான மூன்றிலிருந்து தான் நீர் எனும் நான்காவது பூதம் தோன்றியது. இது சுவை எனும் சூக்குமத்திலிருந்து பிறந்ததுதான். இதில் சத்தம், அசைவு (ஊறு), ஒளி, சுவை என நான்கு குணங்களும் இருக்கும். ஆனால் வடிவம் இருக்காது.. எதில் நீர் இருக்கிறதோ அந்த வடிவமாகி விடும். இந்த நான்கு பூதத்திலிருந்து வடிவமாக வாசனை எனும் சூக்குமத்திலிருந்து உருவானது தான் நிலம் எனும் பூதம்.
இந்த ஐந்து பூதங்களில் நீரைப் பற்றி இந்த பாடலில் பாடுகிறார். ஓதொனாமல் நின்ற நீர் என்றால் அதைப் பற்றி ஏதும் ஓதாமல் நின்ற நீர். அதற்கு உறக்கம் என்பதும் இல்லை அது எதையும் உண்பதும் இல்லை. சாதி பேதம் என்று இல்லாத நீர் என்கிறார். சங்கு இந்த நீருக்குள் உருவானது ஆனால் சங்கில் தண்ணீர் இருக்காது. வடிவமில்லாத நீர் ஆனால் எதில் இருக்கிறதோ அந்த வடிவத்தை குறிப்பால் உணர்த்தும் நீர். ஏதும் இன்றி நின்ற நீர் ஆனால் இயங்குகிறது. அது எப்படி என்று கேட்கிறார். இயங்குவது என்றால் அது ஆவியாக மாறி மேலெழந்து அயனியாக மாறி மீண்டும் குளிர்ந்து நீராக மாறி நிலத்திற்கு வருகிறது. இப்படி இயங்குவது எப்படி என கேட்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *