சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.

சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம்.

சூரியன் மீன ராசியில் தெரிகிறது என்றால் பூமி கன்னிராசியில் இருக்கிறது என அர்த்தம். இப்பொழுது சூரியன் கார்த்திகை மாதம் துலாம் ராசியில் தெரிகிறது என்றால் பூமி மேசராசியில் பயணிக்கிறது என அர்த்தம். சனி கும்பத்தில் வக்கிரத்தில் உள்ளது. வக்கிரத்தில் உள்ளது என்றால் பூமி சனியின் அருகில் பயணிக்கிறது என அர்த்தம். இப்படி சனியின் தாக்கம் மகரத்தில் இருந்து மீனம் வரை மூன்று மாதத்திற்கு இருந்து இருக்கிறது. அதனால் கர்ப்போட்டத்தில் கிடைத்த மழை அளவை விட குறைவாக இருந்து இருக்கிறது. அதாவது சனியின் தாக்கம் மூன்று ராசிகளில் இருக்கும். இப்பொது மேசத்தில் பூமி பயணிப்பதால் மழையின் அளவு அதிகமாகிறது. கடந்த மூன்று மாதமாக இதுவரை தூரல் என கர்ப்போட்டத்தில் குறித்து இருந்தது தூரலாகவே இருந்தது. ஆனால் இனிமேல் காப்போட்டத்தில் கருமேகம் என இருந்தால் தூரலாகவும், தூரல் என இருந்தால் மழையாகவும் பொழியும். இப்போது வெள்ளியும் விடி வெள்ளியாக எதிர்திசையில் இருக்கிறது..
செவ்வாயும் எதிர் திசையில் துலாமில் இருக்கிறது.
கர்ப்போட்டத் தரவுகள் மார்கழியில் எடுத்தால் இந்த வெள்ளி, செவ்வாய், சனி மூன்றையும் கணக்கில் கொண்டு மழை நாட்களில் கணிக்க வேண்டும்.
நாம் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையை பிடிக்கும் காரணம் அந்த மாதத்தில் பெரும்பாலான பயிர்கள் பூ பிடித்து காய் காய்க்கும் காலம். அது சரியாக நடக்க வேண்டும் என்றால் புரட்டாசியில் மழை வேண்டாம் என சனி கிரகத்தை வேண்டி அதை பிடிக்கிறோம்.
எனவே சனியின் தாக்கம் வெள்ளி, செவ்வாய் போல மழைக்கு உண்டு.
இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஊருக்கு ஒருவர் சரியான புரிதலில் இருந்தால் கர்ப்போட்ட கணக்குகள் விவசாயிகளை சென்று அடையும்.
விவசாயத்தில் நட்டம் என்பதே இருக்காது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *