சிவவாக்கியம் பாடல் 183 – அன்னமிட்ட பேரெலாம்

சிவவாக்கியம் பாடல் 183 – அன்னமிட்ட பேரெலாம்

183. அன்னமிட்ட பேரெலாம் அனேக கோடி வாழவே,
சொர்ணம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்.
பின்னம் இட்ட பேரெலாம் வீழ்வர் வீண் நரகிலே,
கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்று தின்னமே!

அன்னதானம் செய்வதென்பது , கலியுகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கொடுமைகளினாள் , வறுமையில் வாடுபவர்களுக்காக உருவாக்கப் பட்டது. அதை செய்பவர்கள் பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்வார்கள் என்கிறார்.
அந்த செலவுகளுக்காக பணம் கொடுப்பவர்கள் துரைத் தனங்கள் பண்ணுவர் , ஏனென்றால் அவர்கள் கையில் பணம் இருக்கும் பெருமையால்.
ஆனால் அந்த அன்னதானத்தை முடக்க நினைப்பவர்கள் வீழ்வர் வீண் நரகத்தில் என்கிறார்.
ஆனால் வாசியால் கன்னமிட்டு சிற்றம்பலம் அடைந்து உச்சியைக் கடந்து பிறப்பிலா பேற்றைப் பெருவார்கள் என்பது தின்னம் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *