182. ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து பூதமாய்.
ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய்.
ஆதி அந்தம் மூல விந்து நாதமேவி நின்றதும்,
ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே!
ஆதி என்றால் தொடக்கம் என பொருள் படும். எதற்கெல்லாம் தொடக்கம் இருக்கிறதோ அவற்றிற்கு அந்தம் (முடிவு ) கண்டிப்பாக இருக்கும். அப்படி தொடங்கியது மூலமான விந்து (பொருள்) அதன் முடிவு நாதம் (அதிர்வு- information) . இந்த ஆதி அந்தமான விந்து நாதம் தான் ஐந்து பூதங்கலாளான உடலாக இருக்கிறது. இந்த ஆதி அந்தமான விந்து நாதம் தான் தமிழ் உயிர் எழுத்தில் ஐந்தாம் எழுத்தாக உ உடல் எனும் அர்த்தத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. அந்த ஆதி அந்தமான விந்து நாதம் ஒன்றை ஒன்று மேவிக் கொண்டு உடலாக இயங்கிக் கொண்டு இருப்பதற்கும் காரணம் அந்த அநாதியானதொன்று சிவாயம் தான் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments