சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்

சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்

181. ஒரேழுத்து உலகெலாம் உதித்த அவ் அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை,
நாளேழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே!

ஓரெழுத்து என்பது அ எனும் முதலாம் அக்சரம் ஆகும். அண்ட மலர்வு என்பதில் உதித்தது தான் இந்த கண்களால் கானும் உலகனைத்தும்.
இரண்டாவது எழுத்தான ஆ (நம் சூரியனின் ) இயம்புகின்ற வெப்பத்தால் கிடைக்கும் இன்பம் எது என்பதை அறிகிலீர். மூவெழுத்து என்றால் இ . மூன்று இணை சூரியன்களால் மூண்டெழுந்த மூர்த்தியை என்றால் அணுக்களால் ஆன அனைத்தும். நாலெழுத்து என்றால் ஈர்த்தல் எனும் ஈ ஈசன் அநாதி . அனைத்தையும் ஈர்த்துக் கொண்டு இயங்கிக் கொண்டு அநாதியாக உள்ள ஈர்த்தல். அது தான் அனைத்தையும் மலரச் செய்து ஒடுக்கிக் கொண்டு உள்ளது. அதை இந்த நாவினால் வார்த்தைகளாக நவின்றதும் இச் சிவாயமே என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *