180. உருவம் அல்ல ஒலியும் அல்ல ஒன்றதாகி நின்றதே.
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே.
இறைவன் என்பவர் உருவம் (விந்து) அல்ல, ஒலியும் (நாதம்)அல்ல ஆனால் இரண்டும் சேர்ந்து ஒன்றதாகி நின்று இருக்கிறது என்கிறார். மருவுதல் என்றால் மருவி புதிய வடிவம் எடுத்தல் என்று பொருள். அவ்வாறு மருவும் அல்ல கந்தம் அல்ல என்கிறார். கந்தம் என்றால் மனம் வீசுதல் என்று பொருள். மனமும் அல்ல என்கிறார். மந்த நாடி உற்றதல்ல என்றால் சுழுமுனையை ஆக்கிரமித்து ஐம்புலன்களில் கிடைத்த அறிவால் இவ்வுலகினைப் புரிந்து கொள்ளும், நானும் அல்ல என்கிறார். நம்மோடு ஓய்வில்லாமல் பேசும் மேல் மனமும் அல்ல என்கிறார். பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் அரியதாக நின்ற நேர்மையான அவரை யாவர் காண வல்லிரே
Tags: சிவவாக்கியம்
No Comments