178. நல்ல வெள்ளி ஆறதாய், நயந்த செம்பு நால தாய்,
சொல்லு நாகம் மூன்ற தாய், குலாவு செம்பொன் இரண்டதாய்,
வில்லின் ஓசை ஒன்றுடன், இனங்க ஊத வல்லீரேல்,
எல்லையற்ற சோதியானை எட்டுமாற்றல்லாகுமே!
நல்ல வெள்ளி ஆறு பங்கும், நயந்த செம்பு நான்கு பங்கும், துத்தநாகம் எனும் ( Galvanize – zinc) இரும்பு துருப்பிடித்தலைத் தடுக்கும் உலோகம் மூன்று பங்கும், குலாவு செம்பொன இரண்டு பங்கும் சேர்த்து துருத்தியில் வில்லின் ஓசை போன்று இனங்க ஊதி கலந்து ஐம்பொன் சிலை வடிப்பார்கள். அப்படி ஓம் எனும் ஆறாம் சக்கரத்தில் நல்லவெள்ளி போன்று சுருண்டு இருக்கும் ஒளி பொருத்திய சக்தியை எழுப்பி , அதாவது மூச்சுக்காற்றை மூலாதாரம் வரை செலுத்தி உள்ளே சுருண்டு வெப்ப ஆற்றலுடன் மேலெழுந்து நான்காவது சக்கரமான சு வதி தானத்தில் எழுந்து சி எனும் அனல் காத்த சக்கரத்தில் நாகம் போன்று எழுந்து விசுத்தி சக்கரத்தில் பொன்நிறத்தில் சுத்தி செய்து அந்த ஒன்றாம் சக்கரத்தில் ஆக்கு நெய் செய்வதற்கு இனங்க வாசியை ஊத முடிந்தவர்களே அந்த எல்லை அற்ற சோதியானை அடைவதற்கு உண்டான ஆற்றல் கொண்டவர்கள் என்கிறார்.
இந்த வாசி யோகம் மிகவும் எளிய நுரையீரலில் சுவாசிக்காமல் அடி வயிறு வரை காற்றை செலுத்தி , வெளி வரும் வெப்பக் காற்றில் ஒரு வகை களிம்பு போன்ற திரவம் வெளிவரும் அதை வெளிச் சென்று வீணாகாமல் தொண்டையில் சுத்தி செய்து சிரசிற்கு சென்று சேர்ப்பது தான் ஆக்கு நெய் என்பது.
இதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் அடி வயிறு வரை காற்றை சென்று வர அனுமதித்து புருவமத்திக்கு செல்ல அனுமதிப்பது . இது மிகவும் எளிமையானது. இதற்கு நாம் வாசியை எந்த முயற்சியும் இல்லாமல் சும்மா இருந்து அனுமதிப்பது தான்.
Tags: சிவவாக்கியம்
No Comments