177. கோயில் பள்ளி ஏதடா? குறித்து நின்ற தேதடா?
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா?
ஞானமான பள்ளியில் , தன்மையாய் வணங்கினால்,
காயமான பள்ளியில் காணலாம் இறையையே !
கோயிலையும், பள்ளிகளையும் நம் முன்னோர்கள் எதற்காக உருவாக்கிக் கொடுத்தார்கள். அங்கு எதைக் குறித்து சொல்லிக் கொடுக்கப் பட்டது என்பது இன்று அறியப்படாமல் மறக்கடிக்கப் பட்டு விட்டது. என்கிறார்.
அங்கு சென்று தொழுது நின்று வாயினால் சொல்லும் மந்திரங்கள் எதைச் சொல்லி நின்றன என்பது தெரியாமல் முனுமுனுப்பதால் இறைவனைக் காண முடியாது.
ஞானமான நம் சிரசு எனும் பள்ளியில் தன்மையாக வணங்கினால் காணலாம் இறைவனை என்கிறார்.
நம் சிரசு எனும் சிற்றம்பலத்தைத்தான் கோயிலாகவும், பள்ளியாகவும் பாவித்து உருவாக்கினார்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments