நிலா, பூமி இரண்டும் சூரியனைச் சுற்றி வருகிறது.
அதே போல் சூரியனை 7 வகையான சக்திகள் (ஒளி, ஒலி, வெப்பம், நீர்மம், புவி ஈர்ப்பு , காந்தம், மின்சாரம்) பின் நோக்கி சுழல வைக்கிறது.
அதாவது பூமி , நிலா, சுற்றுக்கு எதிர் திசையில் சூரியன் , எங்கிருந்து வெடித்து மலர்ந்ததோ?
அந்த இடத்தை நோக்கிப் பின் செல்கிறது.
அந்த 7 வகையான சக்திகளில் ஈர்த்தல் எனும் காந்த சக்திதான் பிரதானமாக சூரியனை பின் நோக்கி சிவத்தை நோக்கி ஈர்க்கிறது.
இந்த அண்டம் வெடித்து மலர்ந்த இடம் சிவம். அந்த சிவம் தென்புலம்.
நம்முடைய சூரியன், பூமி, நிலா மற்ற கோள்கள் அனைத்தும் தன் வட புலத்தை சிவத்தை நோக்கி திருப்பி , சிவத்தை நோக்கி ஈர்த்துக் கொண்டு , நம் பால் வெளி அண்டம் சுருங்கிக் கொண்டு உள்ளது.
அந்த ஈர்ப்பு சக்தியால் சூரியன் சுழன்று கொண்டு பின் செல்கிறது.
ஒரு கல்லை ஒரு கயிற்றில் கட்டி , கயிற்றின் முனையை சுழற்றினால் கல் சுழலும்.
அது போல கயிற்றின் முனையை சுழற்றாமல் அந்த கல் சுழலாது.
அந்த கயிற்றின் முனையை சிறு வட்டமாக சுழற்றினால், கல் பெரிய வட்டமாக கழலும்.
இப்படி அந்த சக்திமையம், சிறு வட்டமாக சுழன்று கொண்டு, சூரியன் பெரிய வட்டமாக சுழன்று கொண்டு பின் நோக்கி சிவத்தை (வீடு பேறு) அடைய சென்று கொண்டு உள்ளது.
சூரியன் தான் தேர், அந்த 7 சக்திகளும் தான் குதிரைகளாக்கினர் நம் முன்னோர்கள்.
நம் சூரியனை சுற்றும் 7 கோள்களும், அந்த சூரியனில் பயணிக்கிறது.
அந்த 7 சக்திகளுக்கும் 7 வண்ணங்கள் கொடுத்தார்கள்.
அவைகளை கோள்களின் குணங்களுடன் பினைத்தார்கள்.
அந்த சக்தி மையத்தை மையமாக்கி சூரியன் சுழன்று, பின் சென்று கொண்டுள்ளது.
அந்த சக்திமையத்தின் பின் சிறு சுழற்சியின் , ஒரு சுற்றுக்கு ஆகும் காலம் தான் 133.33 ஆண்டுகள்.
அதை தசா ஆண்டுகளாக்கினால் 120 தசா ஆண்டுகள்.
சூரிய சுற்றுக்கு நடுவில் சுழலும், அந்த சக்திமையத்தின் சுழற்சியைத்தான் தசாபுத்திகளாக்கினார்கள் நம் முன்னோர்கள்.
அந்த சக்திமைய சுழற்சியும், நம் 12 ராசிகளில் தான் சுழல்கிறது.
27 நட்சத்திரங்களையும் வலம் வருகிறது.
அந்த சக்தி மைய சுழற்சி, சூரியனில் தாக்கத்தை ஏற்படுத்தி, சூரிய வடடப்பாதை நகர்வில் ஒரு அலை போல நகர வைக்கிறது.
அந்த சூரியனின் வட்டப் பாதையின் அலைபோன்ற நகர்வால் நம் பூமியில் , நிறை மாற்றங்கள் சீராக நடைபெறுகிறது.
எப்படி பூமி சூரியனை சுற்றுவதால் குளிர்காலம், வெயில் காலம், மழைக்காலம் என மாறுபாடு அடைகிறதோ, அது போல் சூரியனின் இந்த 120 தசா ஆண்டுகளில் நிறைய இயற்கை சீற்றங்களை சீராக எதிர் கொள்கிறது.
அதை நம் முன்னோர்கள் , பூமியில் ஏற்படும் அந்த மாற்றங்களை குறிப்பெடுத்து , அதை , கோள்களின் இயக்கத்துக் கேற்றவாரு தசா ஆண்டுகளை வகைப்படுத்தினார்கள்.
அந்த 120 தசா ஆண்டுகளில் 7 கோள்களை பூமி , அருகே, தூரமாக மாறி மாறி எதிர்கொள்ளும் .
அதற்கேற்றவாரு நம் பூமியில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
அதையே நம் மனிதர்களுக்கும் நாம் பிறக்கும் போது லக்னம் எந்த ராசியில் உள்ளதோ? அந்த ராசியின் அதிபதியாக , உள்ள கோள்களின் தசாபுத்தியிலிருந்து நம் வாழ்வின் கணக்கு ஆரம்பிக்கும். அடுத்த 120 தசா ஆண்டுகளுக்கு அது தொடரும்.
சூரியன் தன் சுற்றுப் பாதையில் 360 திகிரி வட்டமாக சுற்றுவதில்லை.
அது பூமியைப் போல நீள் வட்டப் பாதையில் தான் சுழல்கிறது.
பூமி சிலராசிகளில் 29 நாட்களும்,
சில ராசிகளில் 30, 31, 32 என மாறி மாறி போவது போல சூரியனும் சில ராசிகளில் , அதிக ஆண்டுகளும், சில ராசிகளில் குறைவான ஆண்டுகளும் எடுத்துக் கொள்கிறது.
சூரியன் 360 திகிரியில் வட்டமாக சுற்றினால், அது ஒரு திகிரியை கடக்க 72 வருசங்களும், ஒரு ராசியை கடக்க 874 வருசங்களாகும்.
ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை.
எனவே சூரிய சுற்றை 60 சுழல் வருசங்களாக்கி (ஒரு வருசத்திற்கு 370.37 திதி) ஒவ்வொரு ராசியிலும் எவ்வளவு 60 சுழல் வருசங்கள் எடுக்கிறது என கணக்கிட்டார்கள்.
அந்த 60 சுழல் வருசங்களை ஒரு கரணமாக கணக்கிட்டார்கள்.
ஒவ்வொரு ராசியையும் கடக்க எவ்வளவு கரணம் ஆகிறது என கணக்கிட்டார்கள். அது மாறுகிறதா என கோவில்களில் கொடிமரங்களில் கண்காணித்தார்கள்.
பூமி, மற்றும் 7 கோள்கள் பயணிக்கும் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை ராசிகளாக்கினார்கள்.
நிலா பயணிக்கும் 30 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை 27 நட்சத்திர மண்டலமாக உருவாக்கினார்கள்.
இப்படி சூரியன் பயணிக்கும் பாதையையும் நம் முன்னோர்கள் பல் ஆயிரக் கணக்கான
ஆண்டுகளாக அவதானித்து , அதை திருக்குறளில் எண்களாக, மறை பொருளாக நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
அதனால் தான் அதை உலகப் பொது மறை என்கிறோம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் அருமையான பதிவுமற்றும் வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 மிகவும் மகிழ்ச்சி 🙏 மிக்க நன்றி செலுத்துவோம் 🙏 நமது தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏
அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்க நலத்துடன் வளத்துடன் வாழ்க வளர்க வெல்க 🙏