175. நட்ட தாவரங்களும், நவின்ற சாத்திரங்களும்,
இட்டமான ஓம குண்ட இசைந்த நாலு வேதமும்.
கட்டி வைத்த புத்தகம், கடும் பிதற்றிதற்கெலாம்,
பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே!.
நட்ட தாவரங்களும் என்றால் அசையா சொத்துக்களை சேர்த்து வைத்தல் என பொருளில் கூறுகிறார். சேர்த்து வைத்த சொத்துக்களும் , ஒடி ஓடி பயின்ற சாத்திரங்களும், ஓம குண்டங்களை வளர்த்து செய்த தானங்களும், ஓதிய நான்கு வேதங்களும், நல்லவை தெரிந்து கொள்ள வேண்டியவை என புத்தகங்களில் தேடித் தேடி எழுதி படித்து, கடும் வாக்கு வாதங்களில் இறைவன் அப்படி இப்படி என பிதற்றியதெல்லாம் , பெட்டதாய் ( தேவையற்றதாய்) முடிந்ததே பிரானை நான் அறிந்த பின் என்கிறார்.
இறைவன் எளிமையானவன். கூடவே இருப்பவன். நாம் தான் அவனை அறியாமல் தேடி அலைகிறோம். நம்முடனே நம்முள்ளே இயல்பாக இருக்கிறான்.
Tags: சிவவாக்கியம்
No Comments