இன்று சித்தர்கள் உருவாக்கிய விண்ணியல் கணிதப்படி வான்பார்த்து கிரகங்களின் உண்மையான இருப்பைக்கொண்டு கணிக்கப்பட்ட சித்தரியல் கணிதப்படி
*திருக்கார்த்திகை தீப திருநாள் ஆகும்*
சித்தனாதன் முருகன் கடவுள் ஆன ஐப்பசி மாதம் முதல்நிலவு நாளில் இருந்து தீபஒளி ஏற்றி வழிபட்டு
கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் வீடுதோறும் தீபம் ஏற்றியும்
கோயில் தோறும் பனைக்கொளுத்தியும்
அடுத்து வரும் மார்கழி மாதம் முழுவதும் தீபம் ஏற்றி தைமாதம்
கதிர் திருப்புநாளுக்கு முதல் நாள் போகி எரித்தும்
தீபவழிபாட்டை நிறைவு செய்வது நமது முன்னோர்களின் வழக்கமாகும்
அந்த வகையில் இன்று அனைவரது இல்லத்திலும் தீபம் ஏற்றி குழுவில் பதிவு செய்து உண்மையான காலத்தை உணர்ந்து செயல்பட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
இனி மழைப்பொழிவு குறைந்து சலனமற்ற உயிர் காற்று நிறைந்து வீசும்
இந்த காலங்களில் வைகறையில் எழுந்து சுவாசத்தை கவனித்து வருவது நல்லது
இனிபடிப்படியாக பனிப்பொழிவு அதிகரிக்கும்
திருக்கார்த்திகை சிறப்பு மலை சுந்து கொளுத்தி மகிழும் குழந்தைகள்
Tags: திருவிழா
No Comments