174. ஒன்றும் ஒன்று ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே!
அன்றும் இன்றும் ஒன்றுமே! அனாதியானது ஒன்றுமே!
கண்றள் நின்ற செம்பொன்னை களிம்பறுத்து நாட்டினால்,
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே…
சிவமும் சக்தியும் ஒன்றி இருக்கும் போது ஒன்று. சக்தியும் சிவமுமாக பிரிந்தால் இரு(க்கும்) அண்டி தான் இரண்டு. சக்தியும் சிவமும் அண்டி இருந்தால் தான் கரங்களில் இயக்கம் இருக்கும். ” எனவே பொருட்களும், சக்தியும் விரிந்து உலகங்களாக மாறி பின் சுருங்கும் என்கிறார்.
இது அன்றும் இன்றும் விரிதலும், ஒடுங்குதலும் நடப்பதுதான் . இவ்வாறு தானும் ஒடுங்கி அனைத்தையும் ஒடுக்குவது அநாதியான ம் எனும் அதிர்வு தான்.
அதில் தான் அண்டத்தின் அனைத்துத் தகவல்களும் அடங்கிய அதிர்வாக ஒடுங்கும்.
அதிர்வுக்கு எடை இல்லை. அது வெறும் தகவல்தான். அதுதான் விதையாக அனைத்துமாக மலர்ந்து விரியும். மீண்டும் ஒடுங்கும். அது தான் ஆழ்மனமாக அதிர்வாக, ஒலியாக, நாதமாக இருக்கிறது.
இறைவனே அதிர்வு என அறிவித்தவர் நம் திருமால் தான். அதனால் தான் அவருக்கு சங்கை ஒரு கரத்தில் கொடுத்துள்ளார்கள். நாதம் தான் அனைத்துக்கும் அநாதி. ஐந்து புலன்களால் நம் புருவமத்தியில் அமர்ந்து அறியும் அந்த ஒளி மிகுந்த செம்பொன் போன்ற சிவாயத்தை இந்தப் பிறவி எனும் களிம்பகற்றி ஒளி வீசச் செய்தால் அன்று தெய்வம் உம்முள்ளே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments