173. முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்ட உச்சிமேல்,
அர்த்தநாரும் அம்மையும் பரிந்து பாடல் ஆடினார்.
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்.
அர்த்த நாடலுற்ற போது அடங்கலாடல் உற்றதே.
பேரறிவை அடைந்து முக்தி அடைய நினைந்து அட்டாங்க யோகத்தின் நிலைகளில், சிரசு எனும் அண்ட உச்சியில் அர்த்தநாரும் (சிவம்) அம்மையும் (சக்தி) பரிந்து பாடல் ஆடினர் . சிவம் என்றால் ஒளி. சக்தி என்றால் வெப்பம். ஒளியான இந்த உடலில் நர்த்தனம் ஆடும் காற்று தான் அர்த்தநார். நம் உடலின் இயக்கத்திற்கு ஆதாரம் காற்று. இதை சித்தரான ஞானிகள் அண்ட வெளியின் நான்கு கரங்களின் தில்லை ஆடல் என்பார்கள்.
இந்த ஒளி பொருந்திய உடலில் காற்றின் நர்த்தனம் நிற்கும் போது , உடலின் ஆட்டம் அடங்கலாகி விடுகிறது.
கண்களுக்குத் தெரியும் அனைத்தும் (பொருள்) சிவம். அது எட்டு வகையான சக்திகளால் இயக்கப் படுகிறது. ஒளி பொருத்திய வெளியில் இயக்கங்களுக்கு ஆதாரம் இந்த காற்றும் (வா) வெப்பமும் (சி) தான் . இப்படி அறிவியலின் உச்சம் தொட்டவர்கள் நம் முன்னோர்கள்.
நவீன விஞ்ஞானம் , இயற்கை அறிவினை ஒரு சதவீதம் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது. புரிந்து கொள்ளவும் முடியாது. புரிந்தால் அது வடிவம் மாற்றிக் கொள்ளும். இதை உணர்ந்த நம் முன்னோர்கள் இயற்கையை புரிந்து அதனோடு இயைந்து வாழும் வாழ்வியலைத் தான் நமக்கு விட்டுச் சென்று உள்ளார்கள். நவீன விஞ்ஞானத்தை அல்ல.
Tags: சிவவாக்கியம்
No Comments