172. நானிருந்து மூல வங்கி தணழெழுப்பி வாயுவால்,
தேனிருந்து வறை திறந்து சித்தி ஒன்றும் ஒத்ததே.
வானிருந்த மதியில் மூன்று மண்டலம் புகுந்த பின்,
கூட இருந்து களவு கண்ட யோகி நல்ல யோகியே!.
நான் என்ற நிலையில் இருந்து அடிவயிற்றில் ‘ எழும் காற்று வெளிவரும் போது சூடாக இருப்பதைத்தான் நானிருந்து மூல வங்கி தணழெழுப்பி அந்த வாயுவைச் கொண்டு அந்நாக்கின் மேல் உள்ள அறை திறந்து தொண்டை வழியாக தேன் போன்ற அமிர்தம் வழிய சித்தி அடைந்து சிற்றம்பலத்தில் மூன்று மண்டலம் (சந்திர மண்டலம், மணம் – சூரிய மண்டலம், புத்தி – மூன்றாவது கண் ஆகிய சித்தம்) புகுந்த பின் தான் புரியும் நம்முடனே இருக்கும் ( இறைவனின் – ஆழ் மனம் ) கள்வனின் களவை கண்டு கொண்டவனே நல்ல யோகி என்று கூறுகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments