167. அங்கலிங்க பீடமாய், ஐயிரண்டு எழுத்திலும்,
பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும்,
பங்கு கொண்ட சோதியும், பரந்த அஞ்செழுத்துமே சங்கு நாத ஓசையும், சிவாயம் அல்லதில்லையே!.
அங்க லிங்க பீடமாய் என்பது உயிர் அமர்ந்த பீடம் சிற்றம்பலம் (சிரசு), ஐயிரண்டு எழுத்திலும் என்றால் (நமசிவாய = 5 அ- 51, உ-52 , ம்- 53 ) உயிர் , பொங்கு தாமரையினும் , மூளையில் , பொருந்தி அமர்ந்து இந்த உடலை இயக்கிக் கொண்டுள்ள சோதியும், இந்த பரந்த ஐம்பூதங்களாலான உடல் அல்லது பரந்த வெளி உருவானது ஒலி எனும் சங்கு நாத ஓசையால் தான். அது சிவாயம் அல்ல என்கிறார் சிவவாக்கியர்.
அந்த அண்ட மலர்வு (Big bang) உருவாவதற்கு முன் அதிர்வாக, நாதமாக ம் எனும் ஒலியாகவும் இருந்தது, சத்தமான வெடிக்குப்பின் , இந்த தனிமங்களாகவும், ஒளியாகவும், வெப்பமாகவும், வெடித்துச் சிதறியது. அந்த நாதம் தான் உயிருக்கு மூலம். அது சிவாயம் அல்ல என்கிறார். சிவம் என்றால் கண்களுக்குத் தெரியும் அனைத்துப் பொருள்களும் தான். சக்தி என்றால் இந்தப் பொருள்கள் அனைத்தும் சக்திகளால் இயங்குகின்றது. ஆனால் அந்த சிவம், சக்தி இரண்டிற்கும் மூலம் நாதம் (காளி) . அது தான் உயிர் உற்பத்தி ஆவதன் மூலம். 20 kHz வரை காதில் கேட்கும். அதிர்வு அதிகமாக அதிகமாக ஒலியிலிருந்து ஒளியாகும், வெப்பமாகும், பொருளாகவும் மாறும்.
Tags: சிவவாக்கியம்
No Comments