இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்,
காட்சி 1: சூரியன் நிலையாக இருக்கிறது
காட்சி 2: சூரியன் 0° பாதையில் சுற்றுகிறது
காட்சி 3: சூரியன் சாய்ந்த வட்டப்பாதையில் சுற்றுகிறது, அதற்கு ஏற்றாற் போல் பூமியின் சாய்ந்த வட்ட பாதையின் வெட்டு புள்ளிகள் மாறுகிறது
*I) சூரியன் நிலையாக இருக்கிறது*,
1) சூரியனை மையப்படுத்திய நாள் – 24 மணி நேரம்
2) நட்சத்திரத்தை மையப்படுத்திய நாள் – 23 மணி நேரம் 56 நிமிடம் 3.45 நொடிகள்
3) சூரியனை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடிகள்
4) நட்சத்திரத்தை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடிகள்
5) பூமி சூரியனுக்கு மிக அருகில் செல்லும் நாளை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடிகள்
*II) சூரியன் 0° பாதையில் சுற்றுகிறது*,
1) சூரியனை மையப்படுத்திய நாள் – 24 மணி நேரம்
2) நட்சத்திரத்தை மையப்படுத்திய நாள் – 23 மணி நேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள்
3) சூரியனை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடிகள்
4) நட்சத்திரத்தை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 6 மணி நேரம் 9 நிமிடம் 10 நொடிகள்
5) பூமி சூரியனுக்கு மிக அருகில் செல்லும் நாளை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடிகள்
*III) சூரியன் சாய்ந்த வட்டப்பாதையில் சுற்றுகிறது*,
1) சூரியனை மையப்படுத்திய நாள் – 24 மணி நேரம்
2) நட்சத்திரத்தை மையப்படுத்திய நாள் – 23 மணி நேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள்
3) சூரியனை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடிகள்
4) நட்சத்திரத்தை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 6 மணி நேரம் 9 நிமிடம் 10 நொடிகள்
5) பூமி சூரியனுக்கு மிக அருகில் செல்லும் நாளை மையப்படுத்திய ஆண்டு – 365 நாள் 6 மணி நேரம் 13 நிமிடம் 53 நொடிகள்
பூமி சூரியனை சுற்றி வர – 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடிகளும், பூமியின் 0° வெட்டுப்புள்ளிகள் சூரியனை சுற்றி வர 365 நாட்கள் 6 மணி நேரம் 13 நிமிடம் 53 நொடிகளும் எடுத்து கொள்கின்றன.
அதாவது பூமியின் 0° வெட்டுப்புள்ளிகள் பூமியை விட 25 நிமிடம் 7 நொடிகள் அதிகமாக எடுத்துக் கொள்கிறது
இதன் மூலம் பூமியின் 0° வெட்டுப்புள்ளிகள் (சம நாட்கள்) பூமி சுற்றுக்கு எதிர் திசையில் (மேற்கில்) வருடத்திற்கு 25 நிமிடம் 7 நொடிகள் (சூரியனை மையமாகக் கொண்டு ஆண்டு) என்ற வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
நிலவின் வெட்டுப்புள்ளிகள் நிலவின் சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றுகிறது என்பதை இங்கு ஒப்பித்து புரிந்து கொள்ளவும்.
அதே சமயம் நட்சத்திரத்தை மையப்படுத்திய வருடத்திற்கும் சூரியனை மையப்படுத்திய வருடத்திற்கும் 20 நிமிடம் 24 நொடிகள் வித்தியாசம்
அப்படி என்றால் நட்சத்திரத்தை மையப்படுத்திய பூமியின் 0° வெட்டுப்புள்ளிகளின் நகர்வு 25 நிமிடம் 7 நொடிகள் – 20 நிமிடம் 24 நொடிகள் = 4 நிமிடம் 43 நொடிகள்
பூமியின் சாய்ந்த வட்டப்பாதை நிலையானதாக இருக்கும் பட்சத்தில் பூமியின் 0° வெட்டு புள்ளிகளின் மேற்கு நோக்கிய நகர்வு வேகமும் பூமியின் கதிர் திருப்ப புள்ளிகளின் மேற்கு நோக்கிய நகர்வு வேகமும் ஒரே வேகமாக இருக்க வேண்டும். ஆனால் பூமியின் கதிர் திருப்பு புள்ளிகளின் வேகம் 3 நிமிடம் 38 நொடிகள்.
இந்த இரண்டு மேற்கு திசையில் வருடத்திற்கு 1 நிமிடம் 5 நொடி என்ற வேகத்தில் Spiral வடிவில் வடக்கு தெற்காக சுற்றி கொண்டு உள்ளது என்று இந்த வேக மாறுபாட்டை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்
இந்த 1 நிமிடம் 5 நொடியானது 1440 நிமிடம் என்று காலத்தை எட்டினால் கிழக்கு மேற்காக 360° சுற்றி வந்து விட்டது என்று பொருள், அதே சமயம் அது ஆரம்பித்த இடத்திற்கு வந்து சேராமல் வடக்கு அல்லது தெற்கு நோக்கி நகர்ந்து இருக்கும், முதல் பாதியில் வடக்கு நோக்கி நகர்ந்தால் இரண்டாம் பாதியில் தெற்கு நோக்கி நகரும்
இப்படி கிழக்கு மேற்கில் 360° சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் = 1440/1 நிமிடம் 5 நொடி = 1440/1.08333333 நிமிடம் = 1329.230769 வருடங்கள் = 1330 வருடங்கள்
இப்படி வருடத்திற்கு 1 நிமிடம் 5 நொடி என்ற வேகத்தில் 1330 வருடத்திற்கு ஒரு முறை சம நாள் ஒரு நாள் தள்ளி வருகிறது, முதல் பாதியில் அதிகரித்து கொண்டே செல்லும் இரண்டாம் பாதியில் குறைந்து கொண்டே செல்லும்
நட்சத்திரத்தை மையப்படுத்திய ஆண்டு கணக்கின்படி சம நாள் மாற தற்போது 72 ஆண்டுகள் ஆகும், காரணம் சூரியன் தற்போது வருடத்திற்கு 20 நிமிடங்கள் என்ற வேகத்தில் சுற்றிக்கொண்டு உள்ளது, இந்த 72 ஆண்டுகள் என்பது சூரியனின் வேகத்தை பொருத்து மாறக்கூடியது
அதே சமயம் சூரியனை மையப்படுத்திய ஆண்டு கணக்கின்படி சம நாள் மாற 1330 வருடங்கள் ஆகும், காரணம் சூரியன் சாய்ந்த வட்டப்பாதையில் சுற்றுகிறது, இந்த வேகம் நிலையானது மாறக்கூடியது அல்ல
நட்சத்திரத்தை மையப்படுத்தி பார்த்தால் சம நாள் பின்நோக்கி மட்டுமே செல்லும், ஆனால் சூரியனை மையப்படுத்தி பார்த்தால் சம நாள் பின் நோக்கியும் நகரும் முன் நோக்கியும் நகரும்
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments