நாம் உணர்ந்த ஆடி 1

நாம் உணர்ந்த ஆடி 1

நாம் உணர்ந்த ஆடி 1 எங்கள் பகுதியில் உணரவைக்கப்பட்டு இன்று ஆடி1 தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடபட்டது (சேலம் நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் ஆடி மாதம் பிறப்பை வரவேற்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாகும்)

இந்த பண்டிகை காவிரி நதி பாயும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது

குறிப்பாக சேலம் ஈரோடு நாமக்கல் கரூர் திருச்சி மாவட்டங்களில் கொண்டாடப்படும்

ஆடி மாதம் என்றாலே ஆடிப்பெருக்கு காவிரி ஆறு தான் நினைவில் இருக்கும் ஐயா

ஐரோப்பிய மொழி குடும்பத்தானின் விளக்கம்

இன்றிலிருந்து 18 நாட்களுக்கு மகாபாரதப் போர் தொடங்குவதால் தேங்காயில் தானியங்களை நிரப்பி அக்கினிக்கு சமர்ப்பித்து வழிபடுவது என்பதாகும்

நம் முன்னோர்கள் கூறுவது ஆடி ஒன்று சூரியன் தென் திசை திரும்பும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை உணர்ந்து

முளைப்புத்தன்மை கொண்ட விதை விதைப்பதற்கு முளைப்பாரி இடுவார்கள்

அந்த தானியங்களை தேங்காயில் நிரப்பி அதை சுட்டு காவிரி கரையோரம் உள்ள பிள்ளையார் கோயில்களில் உடைத்து

வேளாண்மை சிறக்க தொழில் செழிக்க நல்ல மழைபெய்ய வணங்கி

அவரவர்கள் கொண்டு வந்த விதைகளை முளைப்பாரிஇட்டு வீட்டிற்கு எடுத்து வந்து 18 நாட்கள் கழித்து முளைப்பு தன்மையை பார்த்து (பதினெட்டாம் பெருக்கு அதாவது ஒரு விதையை பல விதையாக பெருக்கு என்பதற்கு ஏற்ப )
அந்த முளைப்பாரியை அதே ஆற்றங்கரையில் பிள்ளையார் கோவிலில் வணங்கி ஆற்றில் விட்டுவிட்டு

சிறந்த முளைப்பு தன்மை கொண்ட விதையை அனைவருக்கும் கொடுப்பார்கள்

அனைவரும் அந்த விதையை விதைத்து வேளாண்மை செய்வார்கள் அதற்காக உருவாக்கப்பட்டது

அதாவது ஆடி பிறந்ததும் விதைகளின் விதைப்பு தன்மையை தெரிந்து கொள்வதற்காக ஆடி ஒன்றும் ஆடி 18ம் நம் முன்னோர்கள் கொண்டாடி வந்திருக்கிறார்கள்

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *