முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை. அந்த நீருழியில் இப்போது கொழும்பு எனும் இருக்கும் ஊரிலிருந்து 60 km வரை இருந்தது. தமிழ்நாட்டின் கரையும் இலங்கையின கரையும் சேர்ந்து 60 70 km நிலப்பரப்புடன் இணைந்து இருந்தது.

அப்பொழுது பூம்புகார் ஊர் கடலின் அருகில் இருந்தது. சென்னையில் கடல் இல்லை.
இப்படி தண்டு ஊன்றி கருவறைகளில் இருந்து கொடிமரங்களின் வழியாக வானத்தையும், நிலா சுற்றுக்களையும், சூரிய நகர்வுகளையும், பூமியின் சுற்று எப்படி இருக்கிறது எனவும் கொழும்பின் அருகே இப்பொழுது கடலுக்குள் இருக்கும் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் அமைத்து வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்தார்கள். வேளாண்மைக்குத் தேவையான புதிய புதிய தொழில் நுட்பங்களை விவாதித்து அறிமுகப் படுத்தினார்கள்.
நாவாய்கள் மூலமாக வட புவி கோளத்தில் கடல் வடிந்து புதிய நிலங்களில், வாழத்தகுந்த இடங்களைத் தேடி கண்டு பிடித்து , அங்கு இடம் பெயர ஆரம்பித்தார்கள்.
நெய்தல் தொழில் நுட்பங்கள் வளர ஆரம்பித்தது. இப்படி வேளாண்மையில், மருதநிலமாகவும், கடலில் நெய்தலிலும் பரந்து விரிந்து மக்கள் உணவு தேவை முடிந்து ஆடல் பாடல் கொண்டாட்டங்களில் நாட்டம் கொண்டு புதிய கலைகளை அறம் சார்ந்து வாழப் பழகினார்கள். முருகன் துணையுடன் போர்க் கலைகளையும் முன்னெடுத்தனர்.
ஏனெனில் புதிய நிலங்களில் குடியேறும் பொழுது சிறிது தற்காப்பு கலைகள் இருந்தால் தான் புதிய சூழ்நிலைகளை எதிர் கொள்ள முடியும் என்பதால் அதுவும் கலைகளாக வளர ஆரம்பித்தது.

முருகன் காலத்தில் அவர்களின் தேவைகளுக்காக பல்வேறு தொழில் நுட்பங்கள் வெகு வேகமாக முன்னெடுக்கப்பட்டது. ஏனென்றால் ஒரு பக்கம் உணவு தேவை. மறுபக்கம் இட பற்றாக்குறை.

கிழக்கே சீன பகுதிகளுக்கு குடிபெயர்ந்தவர்களும், ஆஸ்திரேலியா அருகில் உள்ள தீவுகள் எனவும் பலவாறு திசைகளிலும் குடியேறினார்கள்.
வட கோளத்தில் புதிய வாழத்தகுந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு இடம் பெயர்ந்து புதிய ஊர்களை அமைத்து வாழ்வியல் தொடர 200- 300 வருடங்கள் எடுத்துக் கொண்டது.
அதன் பின் உணவுக்காக வேளாண்மைகளை செய்தாலும், இலங்கை தான் உணவு உற்பத்தியில் நன்கு வளர்ந்து இருந்தது.
இலங்கையில் இருந்து கிழக்கிலும், மேற்கிலும் வியாபாரம் செய்ய வசதியாக இருந்தது.

இப்படியே 2000 வருடங்கள் கழிந்து அங்கே இருந்த மலை பழங்குடிகளும் வேளாண்மை பழகி செழிக்கலானார்கள். அவர்கள் வழி வந்தவர் தான் குபேரன். அதுவரை மக்களுக்கு உணவுத் தேவைக்காக ஆகும். செலவை பிரித்து அளவான வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்.
குபேரன் காலத்தில் அதை ஒரு லாபகரமான தொழிலாக்கி செய்து பெரும் செல்வந்தர்கள் ஆனார்கள்.
இப்படி உணவுக்காக தேடி வருபவர்களிடம் , பெரும் லாபம் ஈட்டுவது இராவணன் போன்ற அதே பழங்குடி வம்சாவழிகளுக்குப் பிடிக்காமல் அதை எதிர்த்து தட்டிக் கேட்க ஆரம்பித்தார்கள்.

மறுபடியும் இதை கதையாக பாருங்கள்.
மறுபடியும் 2000 வருடங்களில் சிவ பக்தரான இராவாணன் காலத்தில் அந்த பெருத்த லாபம் கொண்ட வியாபரம் , கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குபேர வம்சாவளிகளுக்கும், இராவண வம்சாவளிகளுக்கும் பெரும் பணிப்போர் ஏற்பட்டது. அந்த காலத்தில் இராவணனுக்கு மாமனார் ஆக இருந்தவர் தான் மாயன்.
மாயன் தொழில் நுட்ப கணக்குகளில் மிகச் சிறந்த தேற்ச்சி பெற்று இருந்தார்.
உலோக தொழில் நுட்பத்திலும் , கட்டுமான தொழில் நுட்பம், வாஸ்து சாத்திரம் உருவாக்கி நகரங்கள் உருவாக்க அடித்தளம் இட்டவர் மாயன்.
அதனால் மாயன் இன்றளவும் தொழில் முனைவோர்களுக்கு குல தெய்வமாக இருக்கிறார்.

இலங்கையில் எப்பொழுதும், மலை மக்களுக்கும், முருகன் குடிகளுக்கும் ஒரு ஆரோய்க்கயமான போட்டி இருக்கும்.
குபேரன் வம்சாவளிகளுக்கு என்று தனியான நாட்காட்டி உருவாக்கியிருந்தார்கள். அதில் மாதத்திற்கு 28 நாட்களும், 4 வாரம் ஒரு மாதமாகவும். மொத்தம் ஒரு வருடத்திற்கு 364 நாட்களாக வைத்துக் கொண்டு அதை வியாபாரத்திற்குப் பயன் படுத்தி வந்தார்கள்.
அதுதான் இப்பொழது சீட்டுக் கட்டாக புழக்கத்தில் உள்ளது.
இன்றும் Corporate company. கள் இந்த நாட்காட்டியைத் தான் பயன் படுத்துகிறார்கள்.
இவர்கள் வருடத்திற்கு 13 மாதங்களை பயன் படுத்தினர்.

ஆனால் குபேரன் வம்சாவளி மக்களை பிடிக்காத இராவண வம்சாவளிகள் அந்த நாட்காட்டியை பயன் படுத்தவில்லை.
அவர்கள் தங்களுக்கு என்று ஐந்திறன் – ஆல் உருவாக்கப்பட்ட சாக்கா நாட்காட்டியை பயன் படுத்தினார்கள்.
சாக்கா நாட்காட்டியில் , சந்திரனை கொண்டுதான் , மாதங்கள் இருக்கும். ஏன் என்றால் இராவாணனும், ஐந்திறனும் சிவ பக்தர்கள், குறிஞ்சி மக்கள். அவர்கள் முருகனை தலைமையாக பார்க்காமல் சிவனைத் தலைமையாக பாவித்தனர். அவருடைய சந்திர நாட்காட்டியை அப்படியே எடுத்து, அதில் பருவத்திற்காக 3 வருடத்திற்கு ஒரு முறை அதிகமாக வரும் நாட்களை எச்சு மாதமாக்கி அதை ஒரு மாத காலம் இந்திர விழாவாக்கி, மீண்டும் சித்திரை – 1 கொண்டாடுவார்கள். அந்த எச்சு மாதத்திற்கு பெயர் இருக்காது.
அப்படி என்றால்
ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள். ?
எச்சு மாதம் எத்தனை நாட்கள் வரும்?

குறிஞ்சி நிலத்தவர்கள் பெரும்பாலும் சிவ பக்தர்கள்தான். ஆனாலும் தமிழக மலை மக்களில் பெரும்பாலோர் முருகனையும், அவருடைய சித்தரியல் நாட்காட்டியைத் தான் பயன்படுத்துவார்கள்.
சித்தர் ஓரையில் உள்ள திருவாதிரை விண்மீனை மையப்படுத்தி நாட்காட்டி தயாரித்ததால் அந்த நாட்காட்டிக்கு சித்தரியல் நாட்காட்டி எனும் பெயர் வந்தது.
அதைத்தான் அவர்கள் Siderial Calender என அழைத்தனர்.

ஐயா வைணவ தளங்கள் எப்போது இருந்து தமிழகத்தில் உள்ளன ஐயா?


சைவம் வைணவம் என இந்த 1500 வருடங்களாகத்தான் பிரித்து அவர்களே சண்டை போட்டுக் கொள்வார்கள்.
அவர்களே வைணவர்கள் என கூறிக் கொண்டு சிவபெருமானை இழிவு படுத்துவார்கள்.
அவர்களே சைவர்கள் என அவர்களைக கூறிக் கொண்டு நம் திருமாலை இழிவு படுத்துவார்கள்.
நம்மை பேச விட மாட்டார்கள்.
இப்பொழுது தையா? சித்திரையா? என அவர்களே அடித்துக் கொள்வார்கள்.
ஆனால் உண்மையில் இரண்டுமே தவறு.
இடையே நாம் பேசுவது ஒருவருக்கும் கேட்காதது போல்.
ஆனால் இனி இது மாறும். அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

இறைவன் என்பவன் இந்த பேரண்டம், அண்டம் இவைகளைப் படைத்து உயிர்களைப் படைத்து இறை கொடுப்பவன்.
அந்த இயற்கையை பற்றி நமக்கு புரிய வைத்து அதனுடன் இயைந்து வாழ்வது எப்படி என நமக்கு எடுத்துக் கூறி நம்மோடு வாழ்ந்து காட்டி கடந்து உள் சென்று சீவனை சமாதி செய்து, பிறவா வரம் பெற்றவர்கள் நம் கடவுளர்கள்.
8 சக்திகளை நாம் தெய்வங்களாக வழி பட்டோம்.
அம்மன்களாகவும், காளிகளாகவும் பெண் வடிவத்தில் சக்திகளாக கொண்டாடினோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *