ராகு என்றால் சூரிய கிரகணம். அது அமாவாசையில் நடக்கும். அன்று நிலவின் நிழல் பூமியின் மேல் விழும். மற்ற அமாவாசைகளில் சூரியன் பட்டு நிலவின் நிழல் இருக்கும் ஆனால் அது பூமியின் மேல் விழாது. விலகி சென்று விடும். சூரிய கிரகணத்தன்று 420 வருடங்களுக்கு முன்னாள் கோயில் பூசாரிகள் எதற்கு கோயில் நடையை சாத்தி விட்டு பூசைகளை செய்யாமல் இருந்தார்கள் என்றால் அன்று அமாவாசை முடிவு நேரத்தை மிகத்துள்ளியமாக கனித்து விட முடியும். போன பஞ்சாங்கம் தயாரித்த போது கணித்த கிரகண நேரம் சரியாக இருக்கிறதா? என சரிபார்க்கத்தான் வேறு வேலைகள் செய்யாமல் இதை கவனித்தார்கள்.
மற்றும் அந்த கிரகண சமயங்களில் பூக்கும் மரங்களோ, அந்த சமயத்தில் சூல் பிடிக்கும் பயிர்களின் விளைச்சல்களில் பாதிப்பு இருப்பதை விவசாயிகள் பார்த்து விவாதித்து இருக்கின்றனர். ஆனால் இந்த கணிதத்தின் துள்ளியத்தை பொறுக்காத குழுவினரால் கட்டுக் கதைகள் உருவாக்கி இந்த ராகு கேதுவை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் மழங்கடித்து விட்டார்கள். இந்த ராகு கேது பஞ்சாங்க கட்டத்தில் இருப்பது கணக்குக்காக மட்டும் தான். ராகு கேது இல்லாமலும் கட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. கிரகணம் அன்று மட்டும் ராகு கேது போட்ட கட்டங்களும் உள்ளது. அதையும் இங்கு பதிவிடுகிறேன்.
நிலா பூமியை கிழக்கு மேற்காக 5 திகிரி வடக்கு தெற்கு சாய்ந்த வட்டப் பாதையில் தான் சுற்றுகிறது. 6 அமாவாசை வடகிழக்கில் நடந்தால் அந்த சமயத்தில் 6 பௌர்ணமிகள் எதிர்திசையில் தென்கிழக்கில் இருக்கும். 6 அமாவாசைகள் தென் கிழக்கில் நடந்தால் 6 பெளர்ணமிகள் வட கிழக்கில் நடை பெறும். இது நிலா பூமியை சுற்றி வரும் போது இரண்டு இடங்களில் பூமியின் நில நடுக் கோட்டை கடக்கும். அந்த வெட்டுப் பள்ளி ஒவ்வொரு சுற்றுக்கும் பின்னோக்கி நகரும். இது சூரியன் சுற்று எதிர் திசையில் நடப்பதால். நிலவில் உண்டாகும். விளைவு.
Tags: சோதி
No Comments