ராகுவின் திசை – 18 வருடம். அதாவது ராகு (சூரிய கிரகணம்) நடைபெறுவது பூமிக்கும் வெள்ளி கோளுக்கும் இடையே சூரியன் வெட்டுப் புள்ளியில் சந்திக்கும் போது சூரிய கிரகணம் அது இந்த முறை சித்திரையில் மீன ராசியில் வந்தால் 6 மாதம் கழித்து கன்னியில் வரும் அடுத்த முறை பங்குனி அமாவாசையில் வரும் . இப்படி பின்னோக்கி நகரும் . இப்படி அதே சித்திரையில் மீனராசியில் மீண்டும் சூரிய கிரகணம் வர பதினெட்டு ஆண்டுகள் ஆகும். நீங்கள் சூரிய கிரகணம் நடந்த நாட்களின் அட்டவனைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். ராகுக்கு 18 திசைகள். 360 திகிரி வட்டத்தை 18 ஆக பிரித்து அது ஒவ்வொன்றும் ஒரு திசை . ஒரு திசைக்கு 9 புத்திகள். அங்கே சூரிய கிரகணம் நடக்கும்.
இதே போல் கேது புள்ளி பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே பெளர்ணமிகளில் நடக்கும். அது 7 வருடத்தில் எதிர்ப் புள்ளி சரியாக பொருந்தி விடும். கேதுவுக்கு 7 திசைகள். 360 திகிரி வட்டத்தை 7 ஆக பிரித்து ஒரு திசைக்கு 9 புத்திகள்.
இப்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் unique. அதை கோடிக்கணக்கான வகைகளாக permutation Combination களாக ராசி, நட்சத்திரம், திசை , புத்தி, பாதம், கேந்திரம், திரிகோணம், 12 கட்டங்கள், பாவங்கள், கோள் சாரம், கிரக தத்துவம் , 7 கோள்கள் என வகைப்படுத்தினார்கள்.
Tags: சோதி
No Comments