மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.
வின் ஞான / மெய் ஞான விளக்கங்கள் இந்த பதிவில் விளக்கியுளேன்.
இந்த தத்துவம் விளங்கினாள் அனைத்தும் விளங்கிவிடும்
இதில் பஞ்ச பூத தத்துவம் / ராசி பஞ்ச பூத தொடர்பு தன்மை / கிரக உச்சம் நீச்சம் விளக்கம் / சர, ஸ்திர, உபய ராசி என்றால் என்ன அவற்றின் தன்மை என்னவென்று விளக்கியுள்ளேன். இறுதியாக முடிவுரை சூரியனுக்கும் உயிரினத்துக்கு உள்ள தொடர்பை ஏன் மேஷம் வைத்தனர் என்று விளக்கி உள்ளேன்.
சரம், ஸ்திரம், உபயம்.விளக்கம்.
இந்த தத்துவம் விளங்கினாள் அனைத்தும் விளங்கிவிடும்
சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று பிரிவுகளாக நமது சித்தர்கள் பிரித்து இருக்கிறார்கள்.
இது தான் பஞ்ச பூத கட்டமைப்பு இந்த மேலே சொன்ன அணைத்து சேர்ந்தது தான் ஜாதகம் / பிரபஞ்சம்.
இதை விண்ஞானதால் புரிந்து கொள்ள முடியாது, மெய் ஞானத்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.
அதனால் தான் நம் சித்தர்கள் இதை உணர்ந்து விளக்கி உள்ளார்கள்.
இது ஒரு வாகனம் போல ஒரு பகுதி இல்லாமல் மற்றொன்று இயங்காது. (its core function)
ஸ்டெல்லர் ஆப், சர , ஸ்திர , உபய நிலைகளை விளக்காது, கிரக உச்சம் நீச்சதை விளக்காது, பஞ்ச பூத தன்மையை விளக்காது. இது வெறும் வானில் உள்ள நிலைகள் மட்டுமே காட்டும்.
நமது சித்தர்கள் அமைத்த அடிப்படைஐ வைத்து தான் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த மேஷம் முதல் வீடு தான் சரியான கணிதம்.
சூரியனுக்கும் உயிரினத்துக்கு உள்ள தொடர்பை ஏன் மேஷம் வைத்தனர்
சூரியனுக்கு எனும் போது பூமி என்று பொருள் கொள்ள வேண்டும் (சூரியன் உச்ச நீச்ச கோட்பாட்டின் படி) .
மேலும் சூரியனுக்கு ஆத்ம காரகன் என்ற கரகதுவம் உண்டு. நம் சித்தர்கள் இந்த பெயரை சும்மா வைக்கவில்லை. சூரியன் என்றால் பூமி (சூரியன் உச்ச நீச்ச கோட்பாட்டின் படி)
ஆத்மா களின் வாழ ஆதாரமான பூமி, மேஷத்தில் (சர நெருப்பு) உச்சம் / அதிக சக்தி பெரும் ராசியே முதல் ராசி. (ஆத்ம காரகனான சூரியன் உச்சம் பெரும் ராசியே மேஷம் முதல் ராசி).
மேஷம் தில் பூமி உச்சம் —
இதில் சரம் ஜீவ ராசிகளின் வீரியம் வந்து விட்டது,
நெருப்பு சக்தி வந்து விட்டது (உஷ்ண நிலை உயரும்) ,
உச்சம் அதிக ஒளி வந்து விட்டது (சூரியனுக்கு நெருக்கத்தில் பூமி),
இந்த அமைப்பு மேஷம் முதல் வீடு, எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் மாறாது. மாற்றவும் முடியாது.
நாம் கணிதத்திற்கு மாற்றி அமைத்தாலும்.கூட, இந்த பிரபஞ்ச ஒழுங்கு விதி மாறாது.
மீறி மாற்றினால் இதனால் ஜாதகம் கணிதம் சரியான தீர்வை தராது. நான் இந்த குரூப்பிற்கு வந்த நோக்கமே, நமது சித்தர்கள் சரியான முறையை கொடுத்து உள்ளார்கள்.அதை மாற்ற கூடாது என்பதற்காகதான் வந்தேன்.
எனக்கு சித்தர்கள் கணிதம் மற்றும் அடிப்படை சூத்திரம் மீது ஆணி தரமான நம்பிக்கை உள்ளது.30 வருட காலம் ஆராச்சியில். இருந்து உள்ளேன். என்னால் முடிந்த வரை பாமரனுக்கும் புரியும் படி எளிமையாக விளக்கியுள்ளேன்.
ஜோதிடம் என்பது பெரிய சமுத்திரம், இந்த விளக்கம் ஒன்றுக்கு 10 முறை திரும்ப திரும்ப படியுங்கள் உங்களுக்கே புரியும்.அதை விட்டு விட்டு வெறும் கேள்விகள் கேட்க்காதிர்கள், உணர்வுடன் திரும்ப படித்தால் உங்களுக்கே புரியும். இந்த விளக்கம் ஒரு சில ஜோதிடருக்கு புரியும்.
எனக்கு வேலை பளு காரணமாக நேரம் கிடைப்பது மிகவும் கடினம் அதனால் அணைத்து கேள்விகளுக்கும். என்னால் பதில் சொல்ல இயலாது, எனது சார்பாக இந்த குரூப்பில் ஜோதிடர்கள் பதில் கூறலாம்.
வேண்டுகோள் கேள்விகளை நிதானமாக அறிவுப்பூரமாக கேட்கவும், விதண்டாவாதம் போல் கேள்விகளை கேட்கவேண்டாம்.
இந்த கோட்பாடு புரிந்தால் மாற்ற தேவை இருக்காது, இந்த குரூப் நோக்கம் சீக்கிரமே முடிவுக்கு வந்து விடும்.நிறைய அன்பர்களின் நேரம் மிச்ச மாகும்
நன்றி அன்பர்களே
இந்த விளக்கங்கள் அனைத்தும் சரி என்று வைத்துக் கொண்டால். மேசத்தில் உச்சம் அடைந்து கொண்டு இருந்த சூரியன் இப்பொழுது நகர்ந்து மீனத்தில் உச்சம் பெறுகிறான். ஆகவே போன 1800 வருடங்கள் சரி இனி வரும் காலங்களில் மீனம் முதல் கட்டமாக்கி வைத்தால் தான் அனைத்தும் சரியாகும் . அது மேச யுகம். இனிமேல் இது மீன யுகம். கால புருசன் நகர்ந்து மீனத்துக்கு வந்ததால் மீனம் தான் முதல் கட்டம். நம் முன்னோர்கள் சரியாகத்தான் கனித்து சொல்லி இருக்கிறார்கள். அதற்குத் தான் கோயில்களும் கொடி மரங்களும் ஊர் முழக்க வைத்தார்கள். அந்த காலங்களில் அதை update செய்ய. கடந்த 420 ஆண்டுகளாக மேசம் தான் முதல் கட்டம் என்று கட்டுக் கதைகளை சொல்லி, நம்மை வான் பார்க்க விடாமல் கொடி மரங்களை மண்டபம் கட்டி மறைத்து விட்டார்கள். அவரவர் வீடுகளில் குச்சி நட்டுப் பார்த்ததில் புரிந்து விட்டது அவர்கள் கட்டுக் கதைகள் எல்லாம். காலப் புருசன் அவர் தன் வேலையை சரியாக வானத்தில் செய்து கொண்டு ராசிகளை கடந்து கொண்டு உள்ளார். எப்பொழுதும் மேசம் தான் முதல் ராசி என்றால் ராசிகளுக்கு மாதத்தின் பெயர்களையே கொடுத்து இருப்பார்கள். ராசிகளுக்கு வேறு பெயர்கள் கொடுத்தது அவற்றின் குணங்கள் மாறும் என்பதால் தான். காலப் புருசன் ராசி கட்டங்களில் நகர்ந்ததால் குணங்கள் மாறி விட்டது. இப்பொழுது மீனராசியில் தான் அக்னி நட்சத்திரம் வருகிறது. கேட்டை நட்சத்திரத்தில் தான் கர்ப்ப ஓட்டம் நிகழ்கிறது. ஆனால் மாதங்களின் குணங்கள் எப்பொழுதும் மாறாது. அதனால் நாம் காலப் புருசன் நகர்ந்தால் அவன் நில நடுக் கோட்டில் இருந்து 30 திகிரி நகரும் வரை காத்திருந்து மீண்டும் , எந்த கட்டத்தில் சூரியன் இருக்கிறாரோ அந்த கட்டத்தை முதல் கட்டமாக்கினால் தான் பருவங்களும், நம் சோதிடமும் சரியாகும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments