மேசம் – 4.1/4 நாழிகை
ரிதபம்-4 3/4 நாழிகை
மிதுனம் 5 1/ 4 நாழிகை
கடகம் 5 1/2 நாழிகை
சிங்கம் 5 1/2 நாழிகை
கன்னி 5 நாழிகை
துலாம் 5 நாழிகை
விருட்சிகம் 5 1/4 நாழிகை
தனுசு 5 1/2 நாழிகை
மகரம் 5 1/4 நாழிகை
கும்பம் 4 3/4 நாழிகை.
மீனம் 4 1/4 நாழிகை.
இப்படி தினமும் 12 ராசிகளும் கிழக்குத் தொடு வானத்தில் 24 மணி நேரத்துக்குள் (60 நாழிகைக்குள்) மேலே வந்து மேற்குத் தொடு வானத்தில் மறையும். இதில் ஒவ்வொரு ராசியும் கிழக்குத் தொடு வானில் மேலே எழும் போது, ஒவ்வொரு ராசியும் மேலே வர எவ்வளவு காலம் ஆகும் என்ற கணக்கு தான் மேலே உள்ள அட்டவனை.
அந்த அட்டவனையைப் பார்த்து விட்டு ஒவ்வொரு ராசிக்கும் மேலே வர காலம் மாறுவதால் அதன் தூரம் மாறுபடும் என கருதக் கூடாது. ஒவ்வொரு ராசியும் 30 திகிரி தான் சாய்ந்த வட்டப் பாதையில். ஆனால் தொடு வானத்தில் அந்த 30 திகிரி ராசி மேலே வர ஆகும். காலம் மாறுபடும். ஏன் என்றால் விண்ணில் 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதை ராசிகள் உள்ளது. நில நடுக் கோட்டில் இருந்து முதல் ராசி மேலே வருவது சீக்கிரம் வந்து விடும். 4 1/4 நாழிகை சாய்வின் கடைசியில் இருப்பது 5.1/2 நாழிகை ஆகும்.
நாம் பஞ்சாங்கம் மாற்றி அமைக்கும் போது இவற்றையும் மாற்ற வேண்டி இருக்கும்.
இதெல்லாம் தான் ஆதாரம் மீனம் முதல் கட்டம் என்பதற்கு.
இதை கிழக்குத் தொடுவான் தெரியும் இடத்தில் குச்சி நட்டு , சம நாளில் எடுத்த நிழலில் அமர்ந்து குச்சிக்கு வடக்கு எந்த ராசி உள்ளது அது ஒவ்வொன்றும் மேலே வர எவ்வளவு நேரமாகும் என்ற கணக்கு எடுக்க வேண்டும் என்றால் முதலில் ராசியின் வடிவம் என்ன. எதிலிருந்து எதுவரை 30 திகிரி. அது மேலே வரும் பொழுது எவ்வளவு காலம் ஆகும் என்பதை பார்த்தே ஆக வேண்டும் என்றால் கம்பியோ, நூலோ குச்சிகளில் கட்டி தொடு வானத்தில் அந்த கம்பிகளிக்கு இடையில் நல் சித்திரங்களின் நகர்வை பார்க்க முடியும். இதற்கெல்லாம் நவீன கருவிகள் வேண்டியதில்லை.
இந்த கணக்குகள் தெரிந்தால் தான் லக்கினம் கணிக்க முடியும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments