சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல். விண்ணியலில் இருந்து எடுத்த கணக்குகளைக் கொண்டு தான் கட்டங்கள் அமைத்து கோள்களின் நிலைகளை, ராசிகளிலும், நல்சித்திரங்களிலும் குறிக்கிறோம். நம் பூமி கட்டங்களின் மத்தியில் உள்ளது.
சோதிடங்களில் குறிக்கப்படும் காரகதத்தும், கோச்சாரம், பாவங்கள், கேந்திரம், அந்தரம் , லக்னம், போன்ற சொற்களின் உண்மையான தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தாலே சோதிடம் புரியும்.
சோதிடம் ஒன்றும் பெரிய ராக்கட் டெக்னாலஜி அல்ல. அதையே நம்மிடம் கற்றுக் தெரிந்து கொண்டவர்கள் தான்.
சிறிது மனம் சம்பந்தப்பட்ட (Phycology )தெரிந்து விண்ணியல் அறிவு இருந்தால் சோதிடம் எளிது. சோதிடம் உண்மையானது. ஆனால் நடைமுறையில் விண்ணியல் அறிவு இல்லாமல் காகிதங்களை நம்பி படித்து மனப்பாடம் செய்து ஒப்பிக்க வைத்தது தான் சோதிட உலகின் பெரும் பின்னடைவுக்குக் காரணம். அதைப் புரிந்து கொண்டு இங்கு சோதிடத்திற்கு மூலமான பஞ்சாங்கம் தயாரிப்பது எப்படி? இன்று உள்ள பஞ்சாங்கத்தில் என்ன தவறு என விவாதிப்பது தான் இந்த தளத்தின் முக்கிய பங்கு. அதை சரியாக செய்வோம்.
சோதிடத்தில் விண்ணியல் அறிவை விட மணம் சார்ந்த விடையங்களை வைத்துத் தான் உருவாக்கப் பட்டுள்ளது. அதனால் அது சார்ந்த விவாதங்களும் வேண்டும் . அனைத்தையும் தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.
Tags: சோதி
No Comments