இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.

சுமார் 12,600 வருடங்களுக்கு முன்பாக இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் , வேளாண்மைக்காக சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.
அதில் Orion Constellation ஆன ஆதி ஓரை உருவாக்கப்பட்டு , திருவாதிரை விண்மீனை மையமாக வைத்து காலண்டர் உருவாக்கப்பட்டது.

இன்றைய ஆங்கில நாட்காட்டிப்படி JAN – 1- ல் அதாவது தெற்கில் கதிர் திருப்ப நாளன்று காலை 5.30 மணிக்கு திருவாதிரை விண்மீன் தெரிந்தது. அந்த நாளை அன்று சித்திரை – 1 என ஆரம்பித்து 12 மாதங்கள் உருவாக்கப்பட்டது. அதுவரை நடைமுறையில் இருந்தது முதல் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கப்பட்ட சந்திர நாட்காட்டி தான். வேளாண்மைக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சித்தரியல் நாட்காட்டி.

ஆனால் இந்த சித்தரியல் நாட்காட்டிப்படி ஒரு வருடத்திற்கு 24 நிமிடம் தாமதமாக அந்த சித்தர் ஓரை எழுந்ததை அவதானித்து, அது சூரியன் ஓட்டத்தால் தான் நடக்கிறது என அறிந்து , சூரியனின் நகர்வை அறிவதற்காக அந்த திருவாதிரை விண்மீனையே மையமாக வைத்து சித்திரை – 1 ஐ தமிழ் புத்தாண்டு ஆக கொண்டாடினார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் அந்த திருவாதிரை மீன் Jan – 2 – ல் எழுந்தது.
அடுத்த 60- வருடம் கழித்து Jan – 3-ல் எழுந்தது. ஆனால் கதிர் திருப்ப நாள் Jan – 1 -லேயே இருந்தது. இப்பொழுது புரிவதற்காக ஆங்கில நாட்காட்டியை சொல்கிறேன். அப்பொழுது ஆங்கில நாட்காட்டி இல்லை. அப்பொழுது தெரிந்தது கதிர் திருப்ப நாட்கள் தெற்கு, வடக்கு இரண்டு தான். அதற்கு இடையே நாட்காட்டியை உருவாக்கினார்கள். வட செலவு, தென் செலவு இரண்டையும் வைத்து மாதங்கள் உருவாக்கப்பட்டது. அப்பொழுது சம நாள் அறிந்து இருக்கவில்லை.

இப்படியே அந்த திருவாதிரை முன் நோக்கி நகர்ந்தபடி இருந்தது. தென் கதிர் திருப்ப நாளில் இருந்து 30 நாட்கள், 40 நாட்கள் என ஒவ்வொரு நாளாக அது நகர்ந்து கொண்டு இருந்தது. அந்த திருவாதிரை 111 நாட்கள் கடந்து ஏப்ரல் – 21 ல் காலை 5.30 மணிக்கு கிழக்குத் தொடுவானில் எழுந்த பொழுது அன்று சித்திரை திருநாள் கொண்டாடப்பட்டது.
ஆனால் திருவாதிரையை மையமாக வைத்து இது வரை கடந்த நாட்காட்டியில் பருவங்கள் சரியாக பொருந்தவில்லை. அதைக் கணக்கில் கொண்டுதான் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் , முறையாக விவாதித்து ராசிகள் உருவாக்கப்பட்டது. இது நடந்தது இன்றிலிருந்து 3600 வருடங்களுக்கு முன்பாக.
அந்த காலத்தில் சம நாளும் சரியாக கணித்து அந்த சம நாளில் கார்த்திகை நட்சத்திரத்தில் ரிதப ராசியில் March – 25 சம நாளில் சித்திரை – 1 உருவாக்கி , சூரிய சுற்றையும் அறியக் கூடிய வகையில் சித்தரியல் நாட்காட்டி திருத்தி அமைக்கப் பட்டது.
அந்த நாட்காட்டி march – 25- சமநாளில் இருந்து ஒவ்வொரு 60 வருடங்களுக்கு ஒரு நாள் , கார்த்திகை நட்சத்திரத்தை மையமாக கொண்டு நகர்ந்தது . அது 30 திகிரி முதல் ராசி கட்டம் ரிதபத்தைக் கடந்து மேசத்திற்குள் , ஏப்ரல் 23 -ல் நுழைந்தபோது பருவம் மாறிவிடக் கூடாது என்பதற்காக 1800 வருடங்களுக்கு முன்பாக , அசுவினியை முதல் நட்சத்திரமாக்கி மேசராசியை முதல் கட்டமாக நகர்த்தினார்கள். இப்படி march – 23 – சமநாளில் இருந்து ஒவ்வொரு 60 வருடமாக march-24 , March – 25 , march – 26 என நகர்ந்து கொண்டே ஏப்ரல்-14 – degree நகர்ந்து இருந்த பொழுது அது நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் சூரியன் நகர்வதை நிறுத்தவில்லை அது நகர்ந்து ஏப்ரல் – 21 -ல் இப்பொழுது அசுவினியுடன் மேசராசியில் சூரியன எழுகிறது.
எனவே நாம் பருவம் தப்பி விடக்கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள் செய்தது போல் மீனராசியை முதல் கட்டமாக மாற்றி மீண்டும் சம நாளில் , சித்திரை – 1 ஆக மாற்றி, உத்ரட்டாதியை முதல் நட்சித்ரமாக மாற்ற வேண்டும்.
இதைத்தான ஒரு முன்னோட்டமாக ராசி கட்டங்களை வடிவமைத்து இருக்கிறோம். அதற்கு உண்டான படங்கள் கொடுத்து இருக்கிறோம்.

நம் கால புருஷன் சூரியன் எப்பொழதும் மேசத்தில் இருக்க மாட்டார். அவரும் இயங்கிக் கொண்டு தான் இருப்பார்.

ராசிகள் உருவாக்கப்பட்டது 3600 ஆண்டுகளுக்கு முன்னர்தான். ஆனால் நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்ட காலம் 7500 வருடங்களுக்கு முந்தியதாக இருக்க வேண்டும்.
அது இராவண காலமாக இருக்கலாம். அவர்தான் சோதிடத்தை மனிதா்களின் வாழ்வியலுக்காக உருவாக்கி உள்ளார்.
நட்சத்திரங்கள், ராசிகள் அதன் வடிவங்கள் நம் கோவில்களில் சிற்பங்களில் வடித்துள்ளார்கள். அதன்படி வானில் பார்க்கும் பொழுது , நட்சத்திரங்களின் வடிவங்கள் நிலவு செல்லும் பாதையில் நிலவு இருக்கும் போது , நன்கு தெரியும் விண்மீன்களைக் கொண்டு வடிவமைத்து இருக்கிறார்கள். 13.2 திகிரியில சில நட்சத்திரங்கள் நடுவிலும், சில நட்சத்திரங்கள் ஆரம்பத்திலும், சிலது கடைசியிலும், இருக்கிறது. ஆனால் ராசிகள் 30 டிகிரியில் ஓரளவிற்கு சரியாக பொருந்துகிறது.
தொடு வானில் கவனிக்க முடிந்தவர்கள் , கவனித்தீர்கள் என்றால் சரியாக ராசிகளையும், நட்சத்திரங்களையும் , கோள்கள் எந்த ராசியில், நட்சத்தில் இருக்கிறது எனவும் துள்ளியமாக பார்க்க முடியும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *