சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது

சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது

சூரியனும் , மற்ற கோள்கள் போல 24 திகிரி சாயந்த வட்டப் பாதையில் தான் பயணம் செயகிறது. ஆனால் பூமி சுற்றின் எதிர் திசையில் பயணிக்கிறது. உதாரணத்திற்கு பூமி மீனம்,மேசம்,ரிதபம் …. எனும் ராசி வரிசையில் பயணம் செய்கிறது. ஆனால் சூரியன் ரிதபம், மேசம், மீனம்,கும்பம் என எதிர் திசையில் பயணிக்கிறது. இதை நாங்கள் விண்ணியலும் வாழ்வியலும் குழவில் மூன்று வருடங்களாக , விவாதித்து, அது பதிவுகளாக விண்ணிபலும், வாழ்வியலும் Telegram குழுவில் பதிவுகளாக உள்ளது.

இப்படி சூரியன் மேசராசியை கடந்து இப்பொழுது மீனராசியில் தெரிகிறது. ஆகவேதான் நாம் முதல் கட்டமாக மீனராசியை வைக்க வேண்டும் என கூறுகிறோம். மீனராசிக்கு சூரியன் வந்ததை தரவுகளோடு வானத்தில் நாங்கள் பார்த்து விட்டோம். அதனால் தான் சித்தரியல் நாட்காட்டி தயாரித்து, அந்த தேதி படி வானில் நிகழ்வுகளை கவனித்து, சரியாக இருப்பதை, அவரவர்கள் ஊரில், அவரவர்களே அவதானிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டு உள்ளோம்.
சம நாள் என்பது வேறு, சூரியன் சுற்றுவது என்பது வேறு. சூரியன் 18 திகிரிகள் நகர்ந்தால் ஒரு சம நாள் மாறும். அதுதான் விதி. அதைத்தான் நாம் மெய் எழுத்தாக 18 எழுத்துக்களை வடித்து உள்ளோம்.

சூரிய சுற்று கிழக்கு மேற்காக , ராசிகளின் பாதையில் 360 திகிரியை 12 ராசிகளில் கடக்கிறது. ஆனால் சம நாள் மாற்றம் என்பது சூரியன் கிழக்கு மேற்காக சுற்றிக் கொண்டே வடக்கு நோக்கி நகர்வதுதான். அதாவது சூரியன் கிழக்கு மேற்காக 18 திகிரி நகர்ந்தால் வடக்கில் ஒரு நாள் பின் நோக்கி நகர்ந்தது. உதாரணத்திற்கு, கதிர் திருப்ப நாள் Dec-22- ல் இப்பொழுது இருக்கிறது என்றால், அடுத்த 1333 வருடங்கள் கழித்து கதிர் திருப்ப நாள் Dec-21 – ஆக மாறும். எனவே சம நாள் கதிர் திருப்ப நாளுக்கும் (சங்கராந்தி) , சூரிய நகர்வுக்கும் , குழப்பம் கொள்ள வேண்டாம். சூரியன் ஒரு திகிரி நகர 60 முதம் 77 ஆண்டுகள் வரை மாறும். இப்பொழுது 72 ஆண்டுகளாக இருக்கிறது. இப்படி இதை புரிந்து கொண்டு வான பார்த்தால் தான் வானில் , மீன ராசி மாறியதை ஏன் மாறியது என புரிந்து கொள்ள முடியும்.
பூமியின் சுற்றுப் பாதை வட்டமெனில் நாம் எப்படி முதல் கட்டம் மேசம் அல்லது மீனம் என வைப்பது? என்று கேட்டால் அதற்குத்தான் சமநாளில் சூரியன் நில நடுக் கோட்டில் எழும். அன்று வானில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறது என பார்க்க வேண்டும். அதுதான் சுழியம் திகிரி. 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் மேசராசியில் , சம நாளில் சூரியன் எழுந்தது. அது ஒவ்வொரு 60 ஆண்டில் ஒரு திகிரி மீன ராசியில் நகர்ந்து இப்பொழுது 30 திகிரி முழுவதுமாக நில நடுக் கோட்டில் இருந்து வடக்கில் மேசராசி நகர்ந்து விட்டது. மீன ராசி முதல் ராசியாக உள்ளது.

இதைத் தான் நம் முன்னோர்கள், கோல் நட்டி கோயில் கருவரை அமைத்து காலங்காலமாக கணிததுக் கொண்டு இருந்தார்கள்.
இப்பொழுது மீன ராசியை வைத்து பருவங்கள் , காலங்கள் நம் தமிழ் மரபுப்படி அவதானம் செய்தோம். சரியாக வருவதால் தான் இந்த விண்ணியலும் சோதிடமும் என்ற குழவில் சோதிடத்தில் இந்த மாற்றம் எந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஆராய போகிறோம்.

மீனராசியில் முழுவதுமாக சூரியன் பிரவேசித்ததிலிருந்து , உலகில் பல மாற்றங்கள் வேகமாக மாறுகிறது. அதை அனைவரும் அறிவோம். இனியும் வரும் காலங்கள் மிகக் கடுமையாக இருக்கும். இது சூரிய பெயர்ச்சி. சூரிய பெயர்ச்சி உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *