விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.

விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.

விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று. அது நம் குடும்பத்தில் ஒளிரும் கோள். அதில் வெப்பம், ஒளி உருவாகி வெளி வழியாக நம்மை அடைகிறது. மற்ற நம் குடும்பத்தில் உள்ள கோள்கள் அந்த ஒளியை வாங்கி பிரதிபலித்து நம் கண்களுக்குத் தெரிகிறது.
நம் சூரிய குடும்பத்தை சுற்றி வெகு தூரத்தில் தெரியும் அத்தனை ஒளி புள்ளிகளும் சூரியன்கள் தான். அவை வெகு தூரத்தில் இருப்பதால் நகராதது போல் தெரிகிறது. அவற்றைச் சுற்றும் கோள்கள் நம் கண்களுக்குத் தெரியாது. தனித்தனியாக தெரியும் விண்மீன்களுக்கு இடையே நம் சூரிய குடும்பம் உள்ளது.

கண்களுக்குத் தெரியும் அனைத்து விண்மீன்களும் ஒரே வேகத்தில் நம் அண்ட மத்தியை நோக்கி ஈர்க்கப் படுவதால் அவை நம் கண்களுக்கு எப்பொழதும் நகராதது போல் காட்சி அளிக்கிறது. நம் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நம் கோள்கள் மட்டும் நகர்வது போல் காட்சி அளிப்பது, அவை அனைத்தும் நம் குடும்பத்தில் பக்கத்தில் இருப்பதால். நம் கோள்கள் வானில் மினுக்காது. மற்ற விண்மீன்கள் மினுக்கும்.
இதை ஏன் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால் , நட்சத்திர மண்டலம், ராசி மண்டலம் , என்பதை வேறு வேறு என நினைத்துக் கொண்டு உள்ளோம். இரண்டும் ஒன்று தான் . இந்த நட்சத்திர மண்டலம், ராசி மண்டலங்களுக்கு இடையே நம் சூரிய மண்டலம் இயங்கிக் கொண்டு உள்ளது.

இவற்றை எல்லாம் வான் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விண்ணில் , சூரியன் மற்றும் பூமி சந்திரன் எந்த இடத்தில் உள்ளது என்பதை , நாம் குச்சி நட்டு அதன் பின்புலத்தில் நிழல் குறித்து, வான் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும். இதை செய்யாமல் சோதி இருக்கும் இடம் எப்படி அறிவது.

குச்சி நட்டு வான் பார்த்துத் தான் , பஞ்சாங்க கணக்குகளை நம் முன்னோர்கள் வடித்தார்கள். அவற்றின் கணக்குகளை நாம் வானத்தில் தான் பார்த்துப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். அதன் மாற்றங்களை அவ்வப் பொழுது பதிவு செய்து , பஞ்சாங்க கணக்குகளை பயன் படுத்த வேண்டும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *