சோதிடம் என்றால் சோதி இருக்கும் இடம் தெரிந்து இருக்க வேண்டும். சோதி என்றால் சூரியன். காலப் புருசன் என்பது சூரியன் தான். நம் சூரிய குடும்பத்தில் சூரியன் தந்தை , பூமி தாய்.
இந்த பூமியில் தான் உயிர்கள் படைக்கப்பட்டு , காக்கப் படும் உயிர்ச் சூழல் உள்ளது. அந்த சூரியனின் ஒளி துளிகள் தான் நம் உயிர். அந்த உயிர் உடல் வடிவமாவது தந்தையின் விறைப் பையில். அந்த உயிர் உருப் பெறுவது தாயிடம்.
இப்படி தாயின் கருப்பையில் உருப் பெற்று நாம் இந்த பூமியில் பிறக்கும் போது, இந்த காலத்தின் கணக்குகளுக்குள் வருகிறோம். தாயின் வயிற்றில் இருக்கும் வரை காலங்கள் நம்மை பாதிப்பதில்லை. நாம் பிறந்த முதல் சுவாசத்தில் இருந்து நமக்கு காலக் கணக்குகள் ஆரம்பிக்கிறது.
இதை ஒட்டிய அவரவர் கருத்துக்களை யார் மனதும் புண் படாதவாறு கருத்துக்களை பரிமாறுவோம். பரிமாற்றம் நல்ல இலக்கை நோக்கி அமைவதாக இருக்க வேண்டும் . கருத்துப் பரிமாற்றங்களில் முடிவு வர வேண்டும்.
கருத்துக்களுக்கு தடை இல்லை.
கால புருசன் என்றால் என்ன ?….அதை ஒட்டிய கருத்துகளாக இருக்க வேண்டும் , என்பதுதான் இங்கே சொல்ல வருவது. ஒவ்வொரு கருத்தாக வரிசையாக தெளிவு செய்து கொண்டே வருவோம்.
கருத்துப் பரிமாற்றங்கள் எப்படி இருக்கிறது என பார்ப்போம். தெளிவு பெருவோம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments