நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை

நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை

நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகையில் குடி இருந்தாலும் அனைவருக்கும் கிழக்கு என்பது, நில நடுக் கோட்டில் சூரியன் உதிக்கும் திசை தான். கிழக்கு திசை என்பது , நாம் அட்சரேகையில் எங்கு குடி இருக்கிறோமோ, அதற்குத் தகுந்தாற் போல் சாய்வு இருக்கும். இவர்கள் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் அயனாம்சம் என்றால் (அயனம் என்றால் பயணம், அம்சம் என்றால் கோணம். ) பூமி இப்பொழுது 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிக் கொண்டு உள்ளது. இந்த பூமியின் சாய்ந்த வட்டப்பாதையின் கோணம் , சூரியனின் இருப்பிடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடும். சூரியனின் சாய்ந்த கோணத்தை , பூமியின் சாய்ந்த கோணம் சரி செய்யும். தெற்கு வடக்கில் சாய்ந்த கோணம் சீராக வடக்கில் 24 திகிரியிலிருந்த தெற்கில் 24 திகிரி வரை சாயும். மீண்டும் வடக்கு நோக்கி , சூரிய சுற்றுக்காக நகரும்.
இப்படி சூரியச் சுற்று 26, 600 வருடத்தில் பூமியின் சாய்ந்த வட்டப் பாதைதான் சீராக 24 திகிரி அலைந்து மாறும். பூமியின் அச்சு சீராக மாறாது.
இந்த அயனாம்சத்தின் சீரான சாய்ந்த வட்டப் பாதையின் அலைவுக்கும் , சூரியன் ராசிகளில் நகர்வதுக்கும் சம்பந்தம் இல்லை. இப்படித்தான் மேசராசியில் தெரிந்த சூரியன் இப்பொழுது மீனராசியில் தெரிகிறது. எப்பொழுதும் மேசராசியிலேயே காலபுருசன் இருக்கும் என்பதற்கு வானில் எந்த குறிப்பும் இல்லை.
இவர்கள் கால புருசன் என்று சொல்வது சூரியனைத்தான் என்றால் அது மேசத்திலிருந்து மீன ராசிக்கு மாறி விட்டது.
காலபுருசன் என்பதை நம் சிவத்தை குறிப்பிட்டால் அது ரிதப ராசிக்கும் மிதுன ராசிக்கும் இடையில் தான் உள்ளது. சிவம் என்றால் நம் பால் வெளியின் நடுமையம்.
மேசம் தான் பூமியின் நடு என்று சொல்வதெல்லாம், சோம்பேறித் தனம் தான். ஏனென்றால், மீன ராசிக்கு சூரியன் மாறியது என்றால், கட்டங்களை மாற்றி, பஞ்சாங்கத்தை திருத்த வேண்டும். இதை எப்படி செய்வது என்று தெரியாமல், அது மேசத்திலேயே நிற்கிறது என்று சொல்லி விட்டால், அப்படியே விட்டுவிடலாம் என்ற சோம்பேறித்தனம் தான்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *