அனலம்மா என்பது வடக்கு தெற்காக தெரியும் , சூரியனின் உயர மாறு பாட்டால் ஏற்படும் பிம்பம். நாம் கோள வடிவ பூமியில் இருக்கிறோம். பூமி வடக்கு தெற்கு அச்சில் கிழக்கு மேற்காக சுற்றிக் கொண்டு உள்ளது. இது போக 23.5 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிக் கொண்டு உள்ளது. சூரியனைச் சுற்றி வரும் போது பூமியின் அச்சு மாறாமல் , வடக்கு திசையில் வட துருவ விண்மீனையும், தெற்கு திசையில் தென் துருவ மீனையும் பார்த்துக் கொண்டு , அந்த அச்சு மாறாமல் 23.5 திகிரி கிழக்கு மேற்கில் வடக்கு தெற்காக சாய்ந்த வட்டப் பாதையில் பூமி , சூரியனைச் சுற்றிக் கொண்டு உள்ளது.
நாம் பூமியில் நிலநடுக் கோட்டிற்கு வடக்கே 23.5 திகிரிக்குள்ளும், தெற்கே 23.5 திகிரிக்குள்ளும் குடி இருந்தால், சூரியன் நம் தலைக்கு மேல் வந்து திரும்பிச் செல்லும். ஆனால் 23.5 திகிரிக்கு வெளியே எங்கு குடி இருந்தாலும் , சூரியன் தூரத்திலிருந்து , நம்மை நோக்கி வந்து , தூரத்திலேயே திரும்பி சென்று விடும். சூரியன் கதிர்கள் செங்குத்தாக தலைக்கு மேல் வராது. ஆனால் அங்கிருந்து , பார்த்தாலும் அனலம்மாவின் வடிவம் 8 போல் தெற்குபகுதியில் பெரிய வட்டமாகவும், வடக்கில் சிறிய வட்டமாகவும் , தெரியும். இதற்கு காரணம் பூமி சூரியனைச் சுற்றி நீள் வட்டத்தில் சென்று வருவதால் தான்.
இந்த அனலம்மாவின் வடிவம் நாம் குடி இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் 8 தெற்கு வடக்கில் நீளம் மாறுபடும். ஆனால் வெட்டுப் புள்ளி நிலநடுக் கோட்டின் வட பகுதியில் 10 திகிரியில் அமையும். அதற்கு காரணம் பூமியின் நீள் வட்டப் பாதைதான்.
சூரியனின் சுற்றுப் பாதையில் சூரியன் போகும் பாதையின் முன்னே பூமி பயணிக்கும் போது , அந்த அரை வட்டத்தில் , சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் குறையும். சூரியனின் சுற்றுப் பாதையில் , சூரியன் செல்லும் பாதையின் பின்புறம் பூமி பயணிக்கும் பொழுது , அந்த அரை வட்டத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் சூரியனுக்கு முன்னால் பூமி பயணிக்கும் பொழுது அழுத்தமும், சூரியனுக்குப் பின்னால் பூமி பயணிக்கும் பொழுது , தளர்வும் ஏற்படுவதால் உண்டாகும் மாற்றம்.
இந்த நீள் வட்டத்தால், கிழக்கு மேற்காக ஏற்படும் உயர மாற்றம் தான் அனலம்மாவுக்கு காரணம்.
இந்த அனலம்மாவில் வடக்கில் 10 திகிரியில வெட்டுப் புள்ளி அமைவதற்கு காரணம் பத்து திகிரி அச்சு மாற்றம் , இந்த இரண்டாம் ஊழிக்குப் பிறகு பூமியின் அச்சு தூபன் விண்மீனிலிருந்து , தூருவ மீனுக்கு மாறியதால் ஏற்பட்டது. இந்த அச்சு மாற்றம் பூமியின் நடுவே உள்ள 8000 km உலோக பந்து தெற்கே சிறிது ஒதுங்கி தெற்கு தாழ்ந்ததால் தான். 10 திகிரி சாய்ந்து வடக்கு உயர்ந்ததால் , சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால் , அந்த அனலம்மாவின் உயர மாறுபாடு ஏற்படுகிறது.
இதற்கும் எப்பொழுதும் மேச ராசியிலேயே தான் கால புருசன் இருப்பார் என்பதற்கும் சம்பந்தமில்லை. ஏப்ரல் – 14 – ல் தான் சித்திரை – 1 என்பதற்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால் வானில் நிகழ்வு இப்பொழது அப்படி இல்லை. மேசத்தில் இருந்து ஏப்ரல் – 14 விலகி விட்டது.
பருவங்களுக்கும் , இந்த அனலம்மாவுக்கும் சம்பந்தம் இருக்காது. நில நடுக்கோட்டில் என்று சூரியன் வருகிறதோ , அன்று தான் உலகம் முழுமைக்கும் சம நாள். செங்குத்து கதிர் நாள் அந்தந்த ஊருக்கு மாறுபடும். அது தான் அவரவர்களுக்கு அக்னி நட்சத்திரம். கதிர் திருப்ப நாள் இரண்டு, சம நாள் இரண்டு, மற்றும் இரண்டு செங்குத்துக் கதிர் நாள் இவைகளுக்குள் தான் பருவங்கள் இருக்கும்.
ஆகையால் அனலம்மா வடிவத்துக்கும் ஏப்ரல் – 14 – சித்திரைக்கும் தொடர்பு இல்லை. அது இப்பொழுது மதுரையில் மையம் கொண்டு உள்ளது. அதனால் தான் நாம் மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைத்தோம். இரண்டாம் ஊழியில் பொதிகை மலையில் மையம் கொண்டிருந்தது.
கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்தாலும் தலைமை பொதிகை மலையாகத்தான் இருந்தது.
ஏப்ரல் – 14-ல் சித்திரை – 1 இருந்தால் பருவங்கள் மாறுபடும். அதை கண்கூடாக காண்கிறோம்.
குச்சி நட்டு , அந்த குச்சியின் பின்புலத்தில் வான் பார்க்கப் பழகுவோம். நம் முன்னோர்கள் தமிழ் நாடு முழுவதும் கோயில்கள் எதற்கு கட்டி, எதை கனித்தார்கள் என யோசித்துப் புரிந்து கொள்வோம். குச்சியின் நிழலை தொடர்ந்து ஒரு வருடமாவது கவனித்தால் தான் பூமியின் சுற்று புரியும். இரவு வானத்தை குச்சியின் பின்புலத்தில் , ஒரு வருடமாவது கவனித்தால் நிலவின் சுற்றும், ராசிகளில் சூரியன் வலம் வருவதை புரிந்து கொள்ள முடியும். அப்பொழுது தான் அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் என்ன தொடர்பு என தெரியும். அதற்குப் பின்னர்தான் சோதிடத்தின் அடிப்படை புரியும். ஒரு மாத on-line வகுப்புகளில் சோதிடம் கற்றால் , அவர்கள் வாழ்வும், சக மனிதர்களின் வாழ்வும் நிலை தடுமாறத்தான் செய்யும். புரிந்து கொள்வோம், குச்சி நடுவோம் வான் பார்ப்போம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments