அணலம்மா என்றால் என்ன ?
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்திற்கு காலை 10 மணி) நிழல் பார்க்கும் குச்சியின் முனையின் நிழலை , வருடம் முழுவதும் குறித்துக் கொண்டு வந்தால் , அதன் வடிவம் எட்டு வடிவமாக காட்சி அளிக்கும்.
இந்த அணலம்மா வின் எட்டு வடிவத்தின் , நடுவே வெட்டும் வெட்டுப் புள்ளி எங்கே அமைகிறது?
பூமியில் அது வட அரைக் கோளத்தில் பத்து திகிரியில் இப்பொழுது வெட்டிக் கொண்டு செல்கிறது.
துருவ விண் மீனுக்கும் இந்த அணலம்மா வடிவத்துக்கும் தொடர்பு உண்டா?.
ஆம். பூமி 23.5 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் , சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால் பூமி வடக்கில் 10 திகிரி சாய்ந்து அதாவது வடக்கு உயர்ந்தும் தெற்கு தாழ்த்தும் உள்ளதைத்தான் அந்த நிகழ்வு காட்டுகிறது.
இது எப்பொழுதும் இதே 10 திகிரியாகத்தான் இருந்து இருக்கிறதா?.
இல்லை. இது 5000 வருடங்களுக்கு முன்னாள் அதாவது இரண்டாம் ஊழிக்கு முன்னால் அது வட அரை கோளததில் 8 திகிரியாக இருந்தது. அன்று வடக்கில் அச்சு தூபன் விண் மீனைப் பார்த்துக் கொண்டு இருந்து இருக்கிறது. அதற்கும் முன்னாள் இன்றிலிருந்து 13,000 ஆண்டுகளில் முதாலாம் ஊழிக்கு முன்னால் அந்த அணலம்மா வெட்டுப் புள்ளி தெற்கில் 10 திதிரியில் இருந்து இருக்கிறது. அப்பொழுது வடக்கு அச்சு வேகா விண்மீனைப் பார்த்துக் கொண்டு இருந்து இருக்கிறது.
Precession என்றால் என்ன ? இந்த procession -க்கும் அனலம்மாவுக்கும் சம்மந்தம் உண்டா?
procession என்பது பூமியின் அச்சில் நகர்வு என்பது சீராக நடக்கும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது. அது 26,000 வருடத்திற்கு அச்சில் நடக்கும் பம்பர சுற்று அலைவு என கூறுவார்கள். ஆனால் நம் இலக்கியங்களில் தொன்று தொட்டு நம் கடலோடிகளாகட்டும், தரையில் இடம் பெயர்பவர்கள் ஆகட்டும் துருவ நட்சத்திரத்தைத்தான் வழிகாட்டுதலுக்கு பயன் படுத்தி இருக்கிறார்கள். அதற்கு உண்டான அத்தனை பதிவுகள் இலக்கியங்களில் உள்ளது. அச்சு கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக மாறவில்லை. இப்பொழுதும் 1.5 திகிரி நகர்வுதான் தெரிகிறது. சமீப காலங்களில் தான் அதாவது 200 வருடங்களாக நகர்ந்து 1.5 திகிரி நகர்ந்தது போல் தெரிகிறது. ஆகவே procession என்பது அச்சு நகர்வு அல்ல. அது சூரியன் கரு மையத்தை சுற்றும் போது அதுவும் 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் தான் சுற்றிக் கொண்டு உள்ளது. இந்த சூரிய சுற்றை பூமி சரி செய்ய தன் வட்டப் பாதையை அலைவு செய்து 24 திகிரி வடக்கில் சாய்ந்து பின் தெற்கில் 24 திகிரி சாய்ந்து சுற்றும். சூரிய சுற்றின் 26,600 வருடத்தில் மூன்று முறை பூமியின் அச்சில் சட்டென 10 வருடங்களில் மாற்றம் நடக்கும். அதுதான் மூன்று ஊழிகள். அதுதான் துருவன் , தூபன், வேகா விண்மீன்களைப் பார்த்து பூமியின் அச்சு மாறுவது. இந்த அச்சு மாற்றம் சீராக இல்லாமல் சூரிய சுற்றால் வரும் , பூமியின் மீது உருவாகும் அழுத்தத்தால் வருவது. இப்பொழுது 10 திகிரியில் உள்ள அணலம்மா வரும் சில ஆண்டுகளில் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொறுத்திருந்து வான் கவனித்து அறிவோம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments