(ஏப்ரல் – 21 ) சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான். அதனால் வைகாசி- 1. ஏனெனில் ஏப்ரல் – 14-ல் தான் என்றுமே மேசராசியில் நுழையும் என்பது வானத்தைப் பார்த்து அறிந்தாலே பொய் என்பது புரிந்து விடும். எந்த புத்தகத்திலும் பார்க்க வேண்டியது இல்லை. அதுதான் அறிவியல். வானில் இருந்து எடுத்த கணக்குகள் தான் பஞ்சாங்கம். இன்று எங்கள் பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் நிழல் இல்லா நாள் என்றால் சூரியன் உச்சிக்கு வந்து நிழல் இல்லா நாளாக இருக்கிறது என்றால் சூரியன் நில நடுக் கோட்டிலிருந்து நகர்ந்து எங்கள் பகுதிக்கு மேல் வந்து இருக்கிறது என அர்த்தம். அதனால் தான் சித்திரை வெயில் கொளுத்துகிறது. அக்னி நட்சத்திரம் இது தான் . இதையும் எந்த புத்தகத்திலும் தரவுகள் தேவையில்லை. குச்சி நட்டு நிழல் பார்த்து , குச்சியின் பின்புலத்தில் இரவில் வான ராசிகளையும், நட்சத்திரங்களையும் பார்க்கத தெரிந்தால் உண்மையான காலங்களை அறிந்து கொள்ளலாம். அதற்குத் தான் நம் முன்னோர்கள் கோவிலும் கொடி மரமும் வைத்து காலங்களை கனித்தார்கள். சம நாள் இரண்டு, கதிர் திருப்ப நாட்கள் இரண்டு , நிழல் இல்லா நாட்கள் இரண்டு இதை வைத்து பருவங்களை கணித்தார்கள். வானில் நல் சித்திரங்களையும், ராசிகளையும் வடித்து , பூமி, நிலா, சூரியன் ஓட்டங்களை கணித்து , அவை எந்த இடங்களில் உள்ளது என அறிந்து, அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் எப்படி என கணிதமாக்கினார்கள்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments