சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

166. கோசமாய் எழுந்ததும், கூடுருவி நின்றதும்,
தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே !
ஈசனார் அருந்திட, அநேக அநேக மந்திரம்,
ஆசனம் நிறைந்து நின்ற , ஐம்பத்தோரு எழுத்துமே !

ஆ காயம் , காற்று, வெப்பம், நீர் எனும் நான்கும் கோசமாய் உயிர் பெற்று எழுந்ததும், கருமுட்டை எனும் கூடு உருவி நின்றதும், வளர்ந்து தேகமாய் பிறந்ததும், இந்த பஞ்ச பூதங்களான சிவாய அஞ்செழுத்துமே. ஈசனார் என்றால் இந்த ஐம்பூதங்களில் உடலாய் மாறுவதற்கு தேவையான பொருட்களையும் , இயங்க 8 சக்திகளில் தேவையான அளவு கரு முட்டையில் (நாதத்தில்) இருந்து ஈர்த்ததால் . ஈசனார் அருந்திட அநேக அநேக , மந்திரம். இந்த உடல் எனும் ஆ சனம் நிறைந்து நின்ற 5 + 1 ஓம் நமசிவாய எனும் எழுத்துக்கள் தான். ஆ என்றால் ஆதவன் (காலை நேர சூரியன்).

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *