165. நாலொடாறு பத்து மேல், நாலும் மூன்றும் இட்டபின்,
மேலும் பத்தும் ஆறுடன் , மேவி அண்ட தொன்றுமே!
கூவி அஞ்செழுத்துலே, குரு விருந்து கூறிடில்
தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே!
பஞ்ச பூதங்களில் ஒன்று என்பது வெளி, இரண்டு என்பது காற்று, மூன்று என்பது வெப்பம், நான்கு என்பது நீர், ஐந்து என்பது நிலம் . (ஆறு என்றால் மூலாதாரம் 6, 7, 8 ). 6- என்பது அ (அண்ட மலர்வு) வையும் 7 – என்பது உ- எனும் உயிரையும். 8 – என்பது ம் எனும் அதிர்வையும் குறிப்பது . ஒன்பது ஈர்த்தவில் உயிர் பெற்று மீண்டும் சிவத்தை நோக்கி செல்வது. 10 என்பது அடுத்த மலர்வுக்கு தயாராகும் சிவமும் சக்தியும் ஒன்றி இருத்தல்.
விதையாக இருந்த நாலும்ஆறும் பத்தின் மேல் நீர் எனும் நான்கையும், வெப்பம் எனும் மூன்றையும் இட்டு உயிர் பெற்று ஈர்த்தலினால் கரு முட்டையான ஆறும் பத்துடன் மேவி அண்டத்துடன் (முட்டையுடன்) ஒன்றுமே. உயிர் பெற்ற உடல் முட்டையுடன் இணைந்து சக்தி பெற்று , ஐம்பூதங்களும் இணைந்து குருத்தாக முளைத்து இறைவனின் துணையுடன் , தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற நம் உடல் நான்கு கோசங்களாய் உருப் பெறுகிறோம்.
Tags: சிவவாக்கியம்
No Comments