ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?.

அனைவரும் சொல்லும் ஒரே காரணம்-
ஏப்ரல் – 14 – ல் சூரியன் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு வருவதால் அன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகிறோம்.

ஏப்ரல் – 14-ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா?

இல்லை. வேறு காரணம் ஏதும் இல்லை.

ஏப்ரல் – 14 -ல் தான் மேச ராசியில் சூரியன் நுழைகிறது என்பதை எப்படி உறுதி செய்வது?

வானத்தில் பார்த்தால் சூரியன் மேச ராசிக்கு அன்று வருகிறதா என பார்க்கலாம்.

ஏப்ரல் – 14-ல் சூரியன் மேச ராசிக்குள் செல்வதை வானத்தைப் பார்த்து உறுதி செய்யலாமா? முடியுமா?

முடியும். வானத்தைப் பார்த்துத்தான் எடுத்த கணக்குகள், பஞ்சாங்க கணக்குகள்.

வானத்தில் வெறும் கண்ணால் ராசிகளையும், நட்சத்திரங்களையும் பார்க்க முடியுமா?

பார்க்க முடியும்.

வானத்தைப் பார்த்து சூரியன் மேசராசிக்குள் ஏப்ரல் – 21 -ல் தான் நுழைகிறது என்றால் ஏப்ரல் – 21-ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடலாமா?

வானத்தைப் பார்த்தால் ஏப்ரல் – 21-ல் தான் சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான். இதை Stellerium App-லும் உறுதி செய்யலாம். இவர்கள் கூற்றுப்படி ஏப்ரல் – 21 – ல் தான் சூரியன் மேச ராசிக்குள் நுழைவதால் ஏப்ரல் – 21 -ல் தான் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட வேண்டும்.

ஏப்ரல் – 21-ல் சித்திரை புத்தாண்டு கொண்டாடினால் பருவங்கள் மாறி விடாதா?

பருவங்கள் ஒரு மாதம் பின் தங்கி விடும்.

ஏப்ரல் – 14 -ல் மேச ராசியில் நுழைத்து கொண்டு இருந்த சூரியன் எப்பொழுதிலிருந்து ஏப்ரல் – 21 -ல் மேசராசிக்குள் நுழைய ஆரம்பித்தான் ?.

420 வருடங்களுக்கு முன்னாள் ஏப்ரல் – 14-ம் தேதி மேச ராசிக்குள் நுழைந்தான். ஒவ்வொரு 60 வருடங்களுக்கு ஒரு திகிரி சூரியன் நகர்ந்து இப்பொழுது ஏப்ரல் – 21 -ல் தான் சூரியன் மேசராசிக்குள் நுழைகிறான். ஏப்ரல் 14-ல் மீன ராசியில் 24 திகிரியில் தான் சூரியன் இருக்கிறான்.

March – 21 -ல் சம நாள் (equinox) என்று சொல்கிறார்களே , அப்படி என்றால் என்ன?

அன்று தான் சூரியன் வட செலவில் (உத்ராயனத்தில்) நில நடுக்கோட்டில் உதிப்பான். அன்று உலகம் முழுவதும் பகல் 12 மணி நேரமாகவும், இரவு 12 மணி நேரமாகவும் சமமாக இருக்கும்.

சம நாளுக்கும் சித்திரைப் புத்தாண்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

1800 வருடங்களுக்கு முன்னாள் , இதே சம நாளில் தான் நாம் சித்திரை புத்தாண்டு கொண்டாடினோம். அன்று தான் மேச ராசிக்குள் சூரியன் நுழைந்தான்.
இப்பொழுது 30 திகிரி நகர்ந்து சூரியன் மீன ராசிக்குள் செல்வதால் சித்திரைப் புத்தாண்டு சம நாளுக்கு அடுத்த நாளான மார்ச் 22 – லேயே ஆரம்பித்து விட்டது. இன்று சித்திரை 23-ம் ஆகி விட்டது. அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டு உள்ளது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *