Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 137 – நாலிரண்டு மண்டலத்துள்

137. நாலிரண்டு மண்டலத்துள், நாதன் நின்றது எவ்விடம்? காலிரண்டு மூல நாடி கண்டதிங்கு ருத்திரன். சேர் இரண்டு கண் கலந்து , திசைகள் எட்டும் மூடியே. மேலிரண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே ! இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன், நாலிரண்டு மண்டலம்-4 x {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 136 – எட்டு மண்டலத்துலே!

136. எட்டு மண்டலத்துலே ! இரண்டு மண்டலம் வளைத்து, இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம். தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம். நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே! எட்டு மண்டலம் என்றால் 1. நட்சச்திர மண்டலம். 2. சூரிய மண்டலம். 3. சந்திர மண்டலம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 135 – காலை மாலை

135. காலை மாலை நம்மிலே கலந்து நின்ற காலனார். மாலை காலையாய்ச் சிவந்த மாயமேது ? செப்பிடீர். காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால். காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே! மாலை காலையாய் சிவந்த மாயமேது செப்பிடீர் என்றால், சூரியன் மாலையில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 134 – நூறு கோடி

134. நூறு கோடி ஆகமங்கள் , நூறு கோடி மந்திரம். நூறு கோடி நாளிருந்து , ஒதினாலும் என் பயன் ? ஆறும் ஆறும் ஆறுமாய் , அகத்தில் ஓர் எழுத்துமாய், ஏறுசீர் எழுத்தை ஓத , ஈசன் வந்து பேசுமே!. நம் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்

133. சித்தர் ஓதும் வேதமும், சிறந்த ஆகமங்களும், நட்ட காரணங்களும், நவின்ற மெய்மை நூல்களும், கட்டி வைத்த போதகம் , கதைக்குகந்த வித்தெலாம். பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின். இறைவனை அடைய நம் சித்தர்கள் , ஓதிய வேதங்களும், சிறந்த ஆகமங்களும், நடுகல் வைத்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்

132. வேனும் வேனும் என்று நீர், வீண் உழன்று தேடுவீர், வேனும் என்று தேடினாலும் உன்னதல்லதில்லையே! வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்த பின், வேனுமென்ற அப்பொருள் விரைந்து காணலாகுமே! இறைவனை அடைய வேண்டி வேனும் வேனும் என்று வீண் உழன்று தேடுவீர், அவனை அடைய வேண்டித் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 131 – தூமை அற்று

131. தூமை அற்று நின்றல்லோ , சுதீபம் உற்று நின்றது. தான்மை அற்று, வாண்மை அற்று , சஞ்சலங்கள் அற்று நின்ற ! ஆண்மை அற்று நின்றலோ? வழக்கமற்று நின்றது. தூமை தூமை அற்ற காலம், சொல்லும் அற்று நின்றதே!. திருமணம் ஆகும். வரை மாதம் மாதம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 130 – மாதம் மாதம்

130. மாதம் மாதம் தூமைதான், மறந்து போன தூமைதான், மாத மற்று நின்றலோ? வளர்ந்து ரூபமானது. நாதம் ஏது?, வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா? வேதம் ஓதும் வேதியர், விளைந்தவாறும் பேசடா? கருவாகாத, கருமுட்டையைத் தான் தூமை (தீட்டு) என்பார்கள். மாதம் மாதம் கருமுட்டை விளைவு உண்டாகாவிட்டால், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 129 – சத்தம் வந்த

129. சத்தம் வந்த வெளியிலே, சலம் இருந்து வந்ததும், சுத்தமாக நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே! சுத்தமேது?, கெட்ட தேது?, தூய்மை கண்டு நின்ற தேது ? பித்த காயம் உற்ற தேது? பேதம் ஏது? போதமே! வானில் இடி இடித்து மழை பெய்வதைத் தான், சத்தம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை

128. அறை அறை இடை கிடந்த அன்று தூமை என்கிறீர். முறையறிந்து பிறந்த போதும் அன்று தூமை என்கிறீர். துறையறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர். முறையிலாத நீசரோடு பொருந்துமாறு தெங்கனே ? பெண்களின் கருவரையில் ஒவ்வொரு 27 நாட்களுக்குள் கருவாகாவிட்டால், அது வெளியேறும், மீண்டும் {…}

Read More