சிவவாக்கியம் பாடல் 302 – நீரிலே முளைத்தெழுந்த

சிவவாக்கியம் பாடல் 302 – நீரிலே முளைத்தெழுந்த

302. நீரிலே முளைத்தெழுந்த தாமரையின், ஓரிலை

நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல் .

பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்,

பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பரே.

தாமரையின் அனைத்து பகுதிகளும், குளத்தின் ஆழத்தில் இருக்கும், மண்ணிலிருந்து சத்துக்களை எடுத்து , நீரிலேயே வளர்கிறது. ஆனால் அந்த தாமரையின் இலையில் , நீர் ஒட்டாது. அதைப் போல!

நம் தலையின் உச்சியில் நம் , மணம் எனும், எண்ண ஓட்டத்தில் நாம் இதுவரை அறிந்த அறிவு எனும் புத்தி ஒளியாக, வெப்பமாக, காற்றாக உருமாறி , விதைப்பைக்குள் விதையாக மாறிய பண்டிதப் பராபரம். பண்டிதம் என்றால் இந்த உலகில் நாம் வாழ , நமக்கு உள்ள அறிவு. அது போக, பராபரத்தின் பேரறிவும் நம்முடன் கூடி இருக்கிறது. ஆனால் அந்த பராபரத்தின் பேரறிவு நம்முடன் இருப்பதை நாம் அறியாமல், நம் ஐந்து புலன்கள் வழியாக அறிவை வெளியே தேடி அலைகிறோம். அந்த மாமத யானைகளான ஐம்புலன்களும் , தரும் அறிவு, புத்தியிலேயே நம் வாழ்நாளை கழிக்கிறோம். அந்த நம்முடன் கூடி இருக்கும் பராபரத்தின் புத்தியை, அறிவை நாம் கவனிக்காமல் நம்மைத் தடுப்பது இந்த ஐம்புலன்கள். இந்த ஐம்புலன்களில் இருந்து விலகி எப்பொழுது அந்த பேரறிவின் பண்டிதங்களை , நினைவற்ற நிலையில் இருக்கிறோமோ? அந்த பண்பு அப்பொழுது தான் நமக்குப் புரியும், என்கிறார்.

Tags:

1 Comment

Leave a Reply to V Prabanjjaraj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *