Month: October 2024

சிவவாக்கியம் பாடல் 306 – மண்ணுலோரும், விண்ணுலோரும்

306. மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாரு எங்கனில்? கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும், அண்ணலோடு சக்தியும், அஞ்சு பஞ்ச பூதமும், பண்ணினோடு கொடுத்து அழிப்பாரோடு ஏழும் இன்றுமே!. மண்ணில் , இந்த உலகில் வாழும் மனிதர்களும், மீண்டும் பிறப்பெடுக்கக் காத்திருப்போரும், பிறவா வரம் பெற்று விண்ணோடு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 305 – பொங்கியே தரித்த

305. பொங்கியே தரித்த அவ் அச்சு புண்டரீக வெளியிலே, தங்கியே தரித்தபோது தாது மாது உலையதாம். அங்கியுட் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க் கொம்புமேல் வடிவு கொண்டு குருவிருந்த கோலமே!. புண்டரீகம் என்றால் தாமரை. கருப்பை இருக்கும் , கருமுட்டை இருக்கும் வெளியை , தாமரை மொட்டுப் போன்ற {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 304 – ஓதுவார்கள் ஓதுகின்ற

304. ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே, வேதமென்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது. நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே. ஏதுமன்றி நின்றது ஒன்றை யான், உணர்ந்த நேர்மையே !. தமிழ் மறை ஓதுவார்கள், இறைவனைப் பற்றி தமிழில் பாடி ஓதும் போது ஓர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 303 – உறங்கிலென் விழிக்கிலென்

303. உறங்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென் . சிறந்த ஐம் புலன்களும், திசைத் திசைகள் ஒன்றிலென், புறம்பும் உள்ளும் எங்கணும், பொருந்திருந்த தேகமாய் , நிறைந்திருந்த ஞானிகாள் , நினைப்பதேது மில்லையே. இறைவனை அடைய, அல்லது முக்தி அடைய, உறங்கிலென், விழித்திலென், உணர்வு சென்று ஒடுங்கிலென் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 302 – நீரிலே முளைத்தெழுந்த

302. நீரிலே முளைத்தெழுந்த தாமரையின், ஓரிலை நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல் . பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம், பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பரே. தாமரையின் அனைத்து பகுதிகளும், குளத்தின் ஆழத்தில் இருக்கும், மண்ணிலிருந்து சத்துக்களை எடுத்து , நீரிலேயே வளர்கிறது. ஆனால் அந்த தாமரையின் இலையில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 301 – இட்டகுண்டம் ஏதடா?

301. இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா? சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா? முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை பற்றிநின்ற தேதடா? பட்டநாத பட்டரே ?. இட்ட குண்டம் என்றால், இருக்கு வேதம் என்றால் என்னவென்று கேட்கிறார் என்றால், அதன் உண்மையான அர்த்தம் பட்ட நாத பட்டருக்கு {…}

Read More

ஐப்பசி மாத அடை மழை என்பது

ஐப்பசி மாத அடை மழை என்பது, காற்று திசை மாறும் , ( அதாவது தென்மேற்கு பருவகாற்றிலிருந்து, வடகிழக்கு பருவகாற்றாக மாறும் ) காலமான ஐப்பசியில், காற்று சுழன்று அடிக்காமல், நின்று, நிதானமாக இரண்டு மணி நேரம் ,மூன்று மணி நேரம் மழை பெய்வதை நாம் பார்க்கிறோம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 300 – மன விகாரமற்று

300. மன விகாரமற்று நீர் மதித்திருக்க வல்லீரேல் ! நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும். அனைவரோதும் வேதமும், அகம் பிதற்ற வேணுமேல், கனவு கண்டது உண்மை நீர், தெளிந்ததே சிவாயமே! மன விகார மற்று நீர். என்றால் நம் மனதில் விருப்பு வெறுப்பு இன்றி இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 299 – அந்தரத்தில் ஒன்றுமாய்

299. அந்தரத்தில் ஒன்றுமாய், அசைவுகால் இரண்டுமாய், செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்த அப்பு நான்குமாய் ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை, சிந்ததையில் தெளிந்தமாயை ,யாவர் காண வல்லரே. நாம் நினைப்பதை பேச்சாக , ஒலியாக அடிவயிற்றில் (மூலாதாரத்திலிருந்து) இருந்து தொண்டை வரை அதிர்வாக்கி , நாவை சுழற்றி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 298 – பூவிலாய ஐந்துமாய்

298. பூவிலாய ஐந்துமாய், புணலில் நின்ற நான்கு மாய், தீயிலாய மூன்றுமாய், சிறந்த கால் இரண்டுமாய், தேயிலாயது ஒன்றுமாய், வேறு வேறு தன்மையாய், நீயலாமல் நின்ற நேர்மை யாவர் கான வல்லரே. பூவிலாயதைந்துமாய் – பூ – என்றால் இந்த பூமி – நிலம் , நிலம் {…}

Read More