Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 202 – ஒன்பதான வாசல்தான்ஒழியும்

202. ஒன்பதான வாசல்தான்ஒழியும் நாள் இருக்கையில், ஒன்பதான ராம ராம ராம என்னும் நாமமே வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பதாம். அன்பரான பேர்கள் வாக்கில் ஆழ்ந்தமை(ஐ)ந்து இருப்பதே! ஒன்பது வாசல்கள் கொண்ட நமது உடல் அழியும் நாள என்று ஒன்று உண்டு. ஒன்பதான ராம {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 201 – அக்கரம் அனாதியோ

201. அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ மிக்க வந்த யோகிகாள் விரித்துறைக்க வேணுமே! நம்முடைய அண்டம் மலர்ந்து நான்கு கரங்களாக விரிந்து பரவியது. அந்த நான்கு கரத்தில் தெற்கில் அமைந்த ஒரு கரத்தில் நம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 200 – ஆதரித்த மந்திரம்

200. ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும் மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை ஏதுபுக்கொளித்ததோ ? எங்கும் ஆகி நின்றதோ சோதி புக்கொளித்திடம் சொல்லடா சுவாமியே! நித்திரை என்றால் என்ன ? நனவு நிலை – நாம் விழித்திருக்கும் போது இயங்கும் நிலையில் 35 கருவிகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 199 – அஞ்செழுத்தும், மூன்றெழத்தும்

199. அஞ்செழுத்தும், மூன்றெழத்தும் என்றுரைத்த அன்பர்காள். அஞ்செழுத்து, மூன்றெழுத்தும், அல்ல காணும் அப்பொருள். அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து, ஒள எழுத்து அறிந்த பின் அஞ்செழுத்து ஒள வின் வண்ணம் ஆனதே சிவாயமே! ஒள எனும் எழுத்த்தில் உள்ள ள என்பது கொம்புகால் என்று அதன் வடிவம் இப்பொழுது உள்ள {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 198 – அங்க லிங்க

198. அங்க லிங்க பீடமும், அசைப மூன்று எழுத்தினும், சங்கு சக்கரத்திலும், சகல வானகத்திலும், பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சிடும், சங்கு நாத ஓசையும், சிவாயம் இல்லதில்லையே! அரு உருவமான அங்க லிங்க பீடமும், அ உ ம் எனும் ஓம் என்ற மூன்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 197 – ஐயிரண்டு திங்களாய்

197. ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான் கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ரச கந்தமும் துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே! மாதா மாதம் வெளியேறும் தூமை கருத்தங்கியவுடன் 5 x 2 = 10 (மாதங்கள் ) திங்களாய் அடங்கி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 196 – அல்லிறந்து பகலிறந்து

196. அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்து போய் அண்டரண்டமும் கடந்த அனேகனேகா ரூபமாய் சொல்லிறந்து மனமிறந்த சுக சொரூப உண்மையைச் சொல்லியாற வின்னில் வேறு துணைவரில்லை ஆனதே!! அல் என்றால் இரவு. இரவு பகல் இல்லாமல், அகம் என்றால் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் சுருக்கி என் (உள்ளம்) {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 196 – பட்டமும் கயிறுபோல்

196. பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை. பட்டமும் கயிறும் இனைந்து இருந்தால் தான் பறக்கும். கயிறு அறுந்து விட்டால் பட்டம் பறந்து விடும். பட்டம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 195 – பொய்க்குடத்தில் திளைத்

195. பொய்க்குடத்தில் திளைத் தொதுங்கி போகம் வீசுமாறு போல் , இச்சடமும் இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே. அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல், இச்சடம் சிவத்தை மொண்டு அகம் அமர்ந்து இருப்பதே!! முக்குணத்தால் உருவான ஞான இந்திரியங்கள் 6-ம் கர்மேந்திரியங்கள் 5 , தன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 194 – சிவாயம் அஞ்செழுத்திலே

194. சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!! நமசிவாய எனும் ஐந்து எழுத்தின் விரிந்த பொருளை அறிந்து தெரிந்து தேவர் ஆகலாம் என்கிறார். சிவாப {…}

Read More