Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 227 – பண்ணி வைத்த

227. பண்ணி வைத்த கல்லையும் பழம் பொருளதென்று நீர் எண்ணமுற்று என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் . பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்து அழிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே. பண்ணி வைத்த கல்லையும் என்றால் , கொடிமரம் நட்டு அதன் சமநாள் நிழலின் கோட்டில் அடையாளமிட்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 225 – அண்டம் ஏழும்

225. அண்டம் ஏழும் உழலவே, அனந்த யோனி உழலவே’ பண்டை மால் அயனுடன் பரந்து நின்று உழலவே, எண் திசை கடந்து நின்று இருண்ட சக்தி உழலவே , அண்டரண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே: நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது என நம் தமிழ் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 224 – நல்ல மஞ்சனங்கள்

224. நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி ஆடி ஓடுறீர். நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதனுண்டு நம்முளே. எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால், தில்லை மேவு சீவனும் சிவ பதத்துள் ஆடுமே! மஞ்சனம் என்றால் திருக்குட நீராட்டு . கோயில்களில் அபிசேக ஆராதனை என வகை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 223 – விழித்த கண்

223. விழித்த கண் குவித்த போது, அடைந்த ஓர் எழுத்தெலாம் , விளைந்து விட்ட இந்திரசால வீடதான வெளியிலே, அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே! விழித்த கண் குவித்த போது என்றால் நாம் தியானத்தில் அமர்ந்து கண் விழித்த நிலையில் குவித்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 222 – சூழித்தோர் எழுத்தை

222. சூழித்தோர் எழுத்தை உன்னி சொல்லு நாடி ஊடு போய். துன்பம் இன்பமும் கடந்து சொல்லு நாடி ஊடு போய். அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே ! ஆறு பங்கையும் கடந்து அப்புறத்து வெளியிலே. சொல்லு நாடி ஊடு போய் என்றால் நமக்கு மட்டும் புரிவது மத்திமை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 221 – வானிலாதது ஒன்றுமில்லை

221. வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில் ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில் நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில் தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே வானம் எனும் வெளி இல்லா விட்டால் எந்த பொருளும் இருக்காது, வானுமே இருக்க முடியாது. ஊன் என்றால், உணவு, உடம்பு என்று பொருள்படும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்

220. ஆதியான அஞ்சிலும், அனாதியான நாலிலும் – சோதியான மூன்றிலும் சொரூபமற்ற இரண்டிலும்- மீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வச்த்துவை ஆதியானதொன்றுமே அற்றதஞ்செழுத்துமே. ஆதியான அஞ்சிலும் என்றால் பஞ்ச பூதத்தால் (உ) ஆன உடல் . அனாதியான நாலிலும் என்றால் உயிர் (மனம், புத்தி சித்தம், நான் {…}

Read More

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன.

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன. கத கத – கதகதப்பு, சூடு, கடகட – விரைவாக, ஒலிக்குறிப்பு கரகர – காய்ந்து இருத்தல் கம கம – மணம் வீசுதல் கண கண – உடம்புச் சூடு கசகச – வியர்த்தல் கலகல – சிரிப்பு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 219 – ஒள எழுத்தில்

219. ஒள எழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ? உவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ? செவ்வை ஒத்து நின்றலோ , சிவ பதங்கள் சேரினும். சிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே? நம் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் அனைத்தும் பொருள் குறித்தனவே. உயிர் எழுத்துக்கள் 12 {…}

Read More