Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்

220. ஆதியான அஞ்சிலும், அனாதியான நாலிலும் – சோதியான மூன்றிலும் சொரூபமற்ற இரண்டிலும்- மீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வச்த்துவை ஆதியானதொன்றுமே அற்றதஞ்செழுத்துமே. ஆதியான அஞ்சிலும் என்றால் பஞ்ச பூதத்தால் (உ) ஆன உடல் . அனாதியான நாலிலும் என்றால் உயிர் (மனம், புத்தி சித்தம், நான் {…}

Read More

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன.

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன. கத கத – கதகதப்பு, சூடு, கடகட – விரைவாக, ஒலிக்குறிப்பு கரகர – காய்ந்து இருத்தல் கம கம – மணம் வீசுதல் கண கண – உடம்புச் சூடு கசகச – வியர்த்தல் கலகல – சிரிப்பு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 219 – ஒள எழுத்தில்

219. ஒள எழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ? உவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ? செவ்வை ஒத்து நின்றலோ , சிவ பதங்கள் சேரினும். சிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே? நம் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் அனைத்தும் பொருள் குறித்தனவே. உயிர் எழுத்துக்கள் 12 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 218 – அகார காரணத்திலே

218. அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய், உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன். மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம். சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!. அகார காரணத்திலே அனேக அனேக ரூபமாய் என்றால் அ எனும் தமிழ் எழுத்தே அண்ட மலர்வின் தன்மையை விளக்கும் எழுத்து தான். எண்ணிலடங்காத {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 217 – வெந்த நீறு

217, வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் . சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம். முந்து மந்திரத்திலோ? மூலமந்திரத்திலோ? எந்த மந்திரத்திலோ ? ஈசன் வந்து இயங்குமே! வெந்த நீறு என்றால் சாம்பல் (திருநீறு). மெய் என்றால் உடல். திருநீற்றை உடலெங்கும் பூசி வேடமும் தரிக்கிறீர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 216 – அரியுமாகி அயனுமாகி

216. அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய் சிறியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ… விரிவதென்று வேறு செய்து வேடமிட்ட மூடரே! அறிவினோடு பாரும் இங்கு, அங்கும் இங்கும்ஒன்றதே! அரி என்றால் பெருமாள், அயன் என்றால் ஐயனார், (முருகன்) . சத்தம் எனும் (அதிர்வு) நாதத்தின் தன்மைகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 215 – எங்கும் உள்ள ஈசனார்

215. எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின் பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அனுகிலார். எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ?. உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே!…. எங்கும் உள்ள ஈசனார் என்றால் இந்த அண்டம் பிரம்மாண்டம் என அனைத்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 214 – உருத்தரிப்பதற்கு முன்

214, உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் . கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன? சுரோணிதம். அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம். குருத்தறிந்து கொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே! உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் என்றால் அப்பாவின் விதைப்பையில் விதையாக உருப்பெறுவதற்கு முன் நாதம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 213 – சுழித்தவோர் எழுத்தையும்

213. சுழித்தவோர் எழுத்தையும் சொண்முகத்து இருத்தியே துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள் அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே!. ஆறுபங்கையம் கலந்து அப்புறத் தலத்துளே. உப்பு, காற்று, உலோகம், அலோகம், காரம் , அமிலம் எனும் ஆறு வகையான பங்கையும் கலந்து விந்துவாக அப்புறத் தளத்திலே {…}

Read More